சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்பு. முருகனின் குறி யாருக்கு ?

Sivanmalai-murugan-1

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பது நம் தமிழ் மொழியின் பழமையான ஒரு பழ மொழியாகும். நமது உடலிலும் மனத்திலும் உள்ள தீவினைகள் நீங்கி அந்த தெய்வீக சக்திகள் நிரம்பி இருக்கும் ஆலயத்திற்கு சென்று அங்கிருக்கும் இறைவனை நாம் வழிபடுவதால், நமக்கு என்றென்றும் பல நன்மைகளை தரும் அப்படி பல்லாயிரக்கணக்கான கோவில்கள் நம் நாடு முழுவதும் இருந்தாலும், சில கோவில்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள் நம்மை ஆச்சர்யப்படுத்தும். அந்த வகையான ஒரு கோவில் தான் “சிவன் மலை கோவில்”.

Sivanmalai Murugan

திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் நகரில் அமைந்துள்ளது இந்த சிவன் மலை “ஸ்ரீ சுப்ரமணிய ஆண்டவர்” கோவில். இக்கோவிலில் ஒரு ஆச்சர்யமான நடை முறை பின்பற்றப்படுகிறது. அது தான் “ஆண்டவன் உத்தரவு பெட்டி” நடை முறை. அதாவது பக்தர்கள் சிலரின் கனவில் அந்த இறைவனே வந்து சில குறிப்பிட்ட பொருட்களை இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்குமாறு கூறுவார். அப்போது அந்த கனவை கண்ட பக்தர் தான் கனவில் கண்ட அந்த பூஜை பொருளை பற்றி இக்கோவில் அர்ச்சகரிடம் கூற, அவர் இறைவனுக்கு பூ போட்டு பிரசன்னம் பார்க்கும் போது அதில் வெள்ளை பூ வந்தால், அவர் கூறிய அந்த பொருள் இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்க படும்.

இன்னொரு பக்தரின் கனவில் ஆண்டவன் வந்து இன்னொரு பூஜை பொருளை பற்றி கூறும் வரை, இப்போது பூஜிக்கப்படும் பொருள் இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியிலே இருக்கும். இந்த பூஜை பொருட்கள் இன்னது தான் என்று வரைமுறை எதுவும் இல்லை. நான்கு மாதத்திற்கு முன்பு ஒரு பக்தருக்கு கிடைத்த உத்தரவு பாடி மிளகு அருகம்புல் போன்றவை இப்பெட்டியில் வைத்து இப்போது வரை பூஜை செய்யப்பட்டு வந்தது.

இந்தாண்டு ஜனவரி மாதத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பக்தையின் கனவில் நோட்டு புத்தகம் வர, ஆண்டவன் உத்தரவு பெற்று அது பூஜிக்கப்பட்டது. அப்போது நம் நாட்டில் வருமான வரி விதிமுறைகள் கடுமையாகின. பல இடங்களில் வருமான வரி சோதனைகளும் நடைபெற்றது. இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த “கென்னடி” என்ற நபரின் கனவில் ஆண்டவன் “அம்பு” சின்னத்தை காட்டியருளினார். அவர் இதுபற்றி இக்கோவிலில் கூறி பிரசன்னம் பார்க்கப்பட்ட பின் அவர் கனவில் கண்டது போல இக்கோவிலிலிருக்கும் செம்பாலான அம்பு சின்னம் இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.

Aandavan utharavu petti

கணக்கு புத்தகம் வைக்கப்படாது GST வரி கட்டுப்பாடு போன்ற கணக்கு சம்மந்தமான பல நிகழ்வுகள் அரங்கிரியது. அது போல இப்போது அம்பு வந்துள்ளதால் இதன் குறி யாருக்காக இருக்கும் என்று பேசியவாறே பக்தர்கள் பலர் அங்கு இறைவனை வணங்கி செல்கின்றனர். உண்மையில் இந்த அம்பு சின்னம் எதை குறிக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்த்தல் தான் தெரியும்.

2019 ஆண்டு வரும் சுப முகூர்த்த நாட்கள் அனைத்தையும் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Here we described the arrow which is kept in Sivan Malai Aandavan Uthravu petti. Usually, some things will be kept in that box and pooja will happen. The things will come in devotes dream and based on that it will be kept in that box.