நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கான மரியாதை கிடைக்கவில்லையா? இதனால் உங்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டதா? அப்ப இத நெத்தியில வச்சுட்டு போங்க!

succes-man-3

நாம் சொல்லுவதை, அடுத்தவங்க காது கொடுத்து கேட்டு, அதன்படி நடந்தாலே போதும். நமக்கான மரியாதை கிடைத்துவிடும். சிலருக்கு மதிப்பும், மரியாதையும் இயற்கையாகவே கிடைக்கும். சிலரைப் பார்த்தாலே உபச்சாரம் செய்ய வேண்டும், அவர்கள் சொல்வதை, நாம் கேட்க வேண்டும். என்று தோன்றும். அந்த அளவிற்கு ஒரு வசீகரம் அவர்களிடம் இருக்கும். சில பேரிடம் வசீகர தோற்றமும், வசீகரப் பேச்சும், வசீகரத் திறமையும் இருக்காது. வசீகரத் தன்மை இல்லாதவர்கள், என்னதான் காட்டு கத்து கத்தினாலும், அவர்கள் வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கட்டாயம் இருக்காது. இப்படிப்பட்டவர்களுக்கு நாளடைவில் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விடும். இது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான்!

sucess-man

நம்முடைய வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு நம்முடைய வசீகரமும் ஒரு காரணமாக இருக்கிறது என்று சொன்னால் கட்டாயம் அது பொய்யாகாது. உங்களுடைய ‘பிசினஸ் டீல் சூப்பரா முடியனும்னா, வசீகரம் கட்டாயம் தேவை. பேச்சிலும், முகத்திலும்.’ ‘திருமணத்திற்கு வரன் அமைய வேண்டும் என்றாலும் வசீகரம் கட்டாயம் தேவை.’ ‘நல்ல வேலை கிடைக்குமா வசீகர தோற்றமும், வசீகரப் பேச்சு கட்டாயம் தேவை.’

சரி. வசீகரம் இல்லாதவர்கள் தங்களை, அடுத்தவர்கள் கவரும் அளவிற்கு, வசீகரமாக மாற்றிக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? வசீகரத் தன்மை நம்மிடம் வந்து விட்டாலே போதுமே! நம்மை தேடி ராஜ மரியாதையும் வரும். ராஜ உபச்சாரமும் வரும். இதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kasthuri-manjal

கஸ்தூரி மஞ்சள், சிகப்பு சந்தனம், சிறிதளவு பன்னீர் போதும். ஒரு ஸ்பூன் அளவு கஸ்தூரிமஞ்சள் எடுத்துக்கொண்டால், ஒரு ஸ்பூன் அளவு சிகப்பு சந்தனம் எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு பன்னீர் ஊற்றி, குழைத்து நெற்றியில் இட்டுக்கொள்ளும். இந்த கலவையை ஒரு சிறிய டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை, தினந்தோறும் நீங்கள் வெளியில் செல்லும் போது, நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தினம்தோறும் இந்த பழக்கத்தை நீங்கள் மேற்கொண்டு வந்தீர்கள் என்றால், அடுத்தவர்கள் உங்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில், நிறைய வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.  உங்களை பார்த்து பேசி பழகுபவர்கள் எல்லோருமே உங்களுக்கு உபச்சாரத்தை கட்டாயம் கொடுப்பார்கள். நீங்கள் முயற்சி செய்யும் காரியம் நிச்சயம் தோல்வியில் முடியாது. தொழில்ரீதியான பிரச்சினைகளும் ஒரு நல்ல முடிவுக்கு வரும். குறிப்பாக நீங்கள் சொல்லும் விஷயத்தை, மற்றவர்கள் கேட்பார்கள். அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

sevapu-sandanam

எந்த ஒரு நல்ல காரியமும், செல்லும் ஒரு தருணத்திலேயே நல்ல முடிவுக்கு வர, இதை நெற்றியில் வைத்துக் கொண்டாலே போதும். நிறைய பேர் இதை நம்ப மாட்டார்கள். ஆனால் இன்றும், மிகவும் பிரபலமாகவும், அடுத்தவர்களால் கவலைப்படும் அளவிற்கு வசீகரத் தன்மை கொண்டவர்களும், மாந்திரீகர்களிடம் சென்று சில தந்திர வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த முறையில் எந்தவித மந்திர தந்திர வித்தைகள் கிடையாது. கஸ்தூரி மஞ்சள், சிவப்பு சந்தானத்திற்கும் இயற்கையாகவே அடுத்தவர்களை கவரக்கூடிய சக்தி இருக்கின்றது. இதை நெற்றியில் இட்டுக் கொள்பவர்களுக்குல், அந்த சக்தி கிரகிக்கப்பட்டு அவர்களும் வசீகரத் தன்மை கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். அவ்வளவுதான். தாழ்வு மனப்பான்மையில் இருப்பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
எச்சரிக்கை! இவை, உங்கள் கனவில் வந்தால், பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Muga vasiyam in Tamil. thazhvu manapanmai in tamil. thazhvu manapanmai neenga. thozhil vasiyam in tamil