30 நிமிடத்தில் உங்களுடைய முகத்தை, 3 மடங்கு வெள்ளையாக மாற்ற, வீட்டில் இருக்கும் இந்த 3 பொருட்களை முகத்தில் இப்படி போட்டாலே போதும்.

face11

முகத்தை வெள்ளையாக பளபளப்பாக மாற்றுவதற்கு நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களே போதும். ஆனால், சமையலறையில் இருக்கக்கூடிய அந்த பொருட்களை எப்படி முறையாக முகத்திற்கு பயன்படுத்துவது என்பதைத் தான் நாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வரிசையில் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் காபி பவுடர், மஞ்சள்தூள், புளிக்காத கெட்டித் தயிர், காய்ச்சாத பால், இந்த நான்கு பொருட்களை வைத்து, நம் முகத்தை எப்படி 30 நிமிடங்களில் பளபளப்பாக மாற்றுவது? இதற்கான ரெமிடியை இப்போதே தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

face

முகத்திற்கு பேக் போடுவதற்கு முன்பாக முதலில் கிளன்சிங் செய்ய வேண்டும். கிளன்சிங் செய்ய தேவையான பொருட்கள் 2. ஒரு சிறிய பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காபி பவுடர் 1 ஸ்பூன், காய்ச்சாத பால் தேவையான அளவு ஊற்றி, காப்பி பவுடரை நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் நன்றாக தடவி வட்ட வடிவில் 2 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் வெளியேற்றப்பட்டு முகம் சுத்தமாகி இருக்கும்.

அதன் பின்பு முகத்திற்கு ஒரு ஃபேஸ் பேக் போட வேண்டும். ஒரு சிறிய பௌலிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் காபி பவுடர் 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், புளிக்காத கெட்டித் தயிரை – 1 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் தேன் இருந்தால் 1/2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம். தேன் இல்லை என்றாலும் பரவாயில்லை அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

face13

காபி பவுடர் மஞ்சள் தூள் தயிர் இந்த 3 போன்ற பொருட்களையும் நன்றாக அடித்து கலக்கி முகத்தில் ஃபேஸ் பேக் போடும் பக்குவத்திற்கு கொண்டு வர வேண்டும். இந்த பேக்கை முகத்தில் முழுவதும் அப்ளை செய்து 10 லிருந்து 15 நிமிடங்கள் அப்படியே உலர வைத்து அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டாலே போதும். முகம் உடனடியாக வெள்ளையாக மாறிவிடும்.

இறுதியாக ஐஸ் கட்டியை கொண்டு உங்களுடைய முகத்தை இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்து கொடுக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்யலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைய தொடங்கும். முகத்தில் இருக்கும் கருந்திட்டுகளும் படிப்படியாக குறையும். சிலருக்கு முகம் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்ட முகம் உடனடியாக பளபளப்பாக மாறும்.

face2

தயிரை முகத்தில் சேர்ப்பதன் மூலம் முகம் எண்ணெய் வடிய தொடங்கும் என்ற பயம் தேவையில்லை. தயிரில் காபி பவுடர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யும்போது முகம் ஆயில் சிக்கினாக மாறுவதற்கு வாய்ப்பே கிடையாது. சிலபேருக்கு தயிரை வெறுமனே முகத்தில் போட்டால் முகப்பரு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தயிருடன் கடலை மாவு, பயத்தம் பருப்பு, காபி பவுடர் போன்ற பொருட்களை சேர்த்து முகத்தில் போடும்போது முகப்பரு வருவதற்கு வாய்ப்புகள் குறைவு. பயம் இல்லாமல் இந்த குறிப்பை பின்பற்றி பார்க்கலாம். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும், உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.