உங்க முழு உடம்பும் தங்கம் போல ஜொலி ஜொலிக்க இந்த ஒரு எண்ணெய் இருந்தா போதும். வாழ்நாள் முழுவதும் அழகு தேவதையாக வலம் வர செலவே இல்லாத அருமையான அழகு குறிப்பு.

- Advertisement -

முகம் கொஞ்சம் பார்க்க பளிச்சென்று பளப்பளப்பாக இருந்தாலே அது ஒரு தனி சந்தோஷத்தையும் ஒரு தன்னம்பிக்கையும் கொடுக்கும். முழு உடம்பும் நல்லா பளப்பளன்னு தங்கம் போல ஜொலிக்க கூடிய அழகை பெற முடியும். அதுவும் செலவே இல்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து செய்து விடலாம் என்றால் கேட்க எத்தனை ஆச்சரியமாக இருக்கிறது. இந்த அழகு குறிப்பு பதிவில் முழு உடலும் ஜொலிப்புடன் இருக்க தயாரிக்கப் போகும் எண்ணெய் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தங்கம் போன்ற மேனி அழகை பெற கேரட் எண்ணெய்
இந்த எண்ணெய் தயாரிக்க நமக்குத் தேவையானது இரண்டே பொருள் தான் ஒரே ஒரு முழு கேரட் 50 கிராம் தேங்காய் எண்ணெய். இது மட்டும் இருந்தால் போதும் ஒரு வாரத்திற்கு தேவையான எண்ணெயை தயார் செய்து விடலாம். மிக மிக எளிமையான முறையில் தயார் செய்யும் இந்த எண்ணெயை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

முதலில் ஒரு கேரட்டை சுத்தம் செய்த பிறகு நன்றாக துருவி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தை வைத்து சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் 50 கிராம் சேர்த்துக் கொள்ளுங்கள். கேரட்டை சேர்த்த பிறகு அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து விடுங்கள். இந்த எண்ணெய் மிதமான தீயிலே இந்த கேரட்டின் சாறு முழுவதுமாக இறங்கும் வரை காய வேண்டும்.

நீங்கள் காய்ச்சும் எண்ணெயில் கேரட் கருகி விடாமல் கோல்டன் கலரில் பொரிந்து வரும் வரை வதக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் எடுத்து வைக்கும் எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்கும். எண்ணெய் நன்றாக ஆரஞ்சு நிறத்திற்கு மாறி வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை ஆற விடுங்கள். எண்ணெய் நன்றாக ஆறிய பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து வடிகட்டி இதை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணையை நீங்கள் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உங்கள் முகம் கை கால் உடம்பு முழுவதிலும் தேய்த்து விட்டு அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல குளித்து விடலாம் அல்லது முகத்திற்கு மட்டும் போதும் என நினைத்தால் இரவு தூங்கும் பொழுது இந்த எண்ணையை லேசாக முகத்தில் அப்ளை செய்து விட்டு அப்படியே படுத்து விடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து முகத்தை அலம்பி கொள்ளுங்கள். இந்த எண்ணெய் முகத்தை நல்ல நிறமாக மாற்றுவதன் முகத்தில் இருக்கும் கருத்திட்டுகளை நீக்கி முகத்தை பொலிவுடன் மாற்றி விடும்.

ஒரு முறை தயாரித்த எண்ணெய் நீங்கள் வெளியில் வைத்து பயன்படுத்தினால் கூட மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் ஃப்ரிட்ஜில் வைப்பது என்றால் ஆறு மாதம் வரை கூட வைத்து பயன்படுத்தலாம். ஆனால் பயன்படுத்தும் முன்பு கொஞ்சம் சிறிது நேரம் வெளியில் எடுத்து வைத்த பின்பு பயன்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே: முடி கொட்டிய இடத்தில் புதிய முடிகள் கிடு கிடுவென்று வேகமாக வளர இந்த ஹேர் பேக்கை ட்ரை பண்ணுங்க. உதிர்ந்த இடத்தில் முடி வளர்வதோடு மீண்டும் உதிராமல் தலை முடி உதிரவே உதிராது.

முழு உடம்பையும் தங்கம் போல ஜொலிக்க வைக்க கூடிய இந்த எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் இதை நீங்களும் தொடர்ந்து பயன்படுத்தி அழகு தேவதையாக வலம் வரலாம்.

- Advertisement -