இந்த 1 எண்ணெய் மட்டும் போதுமே! முடி உதிர்வு உடனடியாக நிற்கும். முடி கருகருவென அடர்த்தியாக கட்டுக்கடங்காமல் காடுபோல வளரத் தொடங்கும்.

hair-growth-oil

இந்த குறிப்பு பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த குறிப்புதான். ஆனால் நிறைய பேர் இந்த குறிப்பை சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தி விட்டு, முடி உதிர்வு குறையவில்லை. முடி அடர்த்தியாக வளர வில்லை, என்று நினைத்து குறிப்பை பின்பற்றும் பழக்கத்தை விட்டு விடுகிறார்கள். ஆனால், இந்த எண்ணெய்க்கு அவ்வளவு சக்தி உள்ளது. நம் வீட்டிலேயே தேங்காய் எண்ணெயோடு இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து நம் கையாலேயே ஒரு எண்ணெயைத் தயார் செய்ய போகின்றோம். தொடர்ந்து விடாமல் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நிச்சயமாக முடி வளர்ச்சியில் மாற்றத்தைக் காண முடியும். அது எந்த எண்ணெய்? எப்படி தயார் செய்வது பார்க்கலாம் வாருங்கள்.

onion-oil

நம் வீட்டிலேயே நம் கையாலேயே தயாரிக்கப் போகும் எண்ணெய் சின்ன வெங்காய எண்ணெய் தான். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். மரச்செக்கு எண்ணெய் என்று சில கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. பிராண்ட் உள்ள தேங்காய் எண்ணெய் என்றாலும் பரவாயில்லை. இருப்பினும் மரச்செக்கு எண்ணெய்க்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

தோல் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொள்ளுங்கள். (10 லிருந்து 15 சின்ன வெங்காயம்.) அடுப்பில் ஒரு கடாயை வைத்துவிடுங்கள் முதலில் தேங்காய் எண்ணெயை 100 ml அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் லேசாக சூடாகி வரும்போது, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் வெங்காயத்தை எண்ணெயோடு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விடவேண்டும். வெங்காயத்தில் இருக்கும் சாரு அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்கி விடும். (அடுப்பை வேகமாக வைத்தால் வெங்காயத்திலிருந்து சாறு எண்ணெயில் இறங்காது. வெங்காயம் கருகிப் போய் விடும்.)

coconut oil 2

10 நிமிடத்தில் எண்ணெயில் போட்ட வெங்காயத்தின் சிடசிடப்பு  முழுவதுமாக அடங்கியவுடன், எண்ணெயை நன்றாக ஆறவைத்து, இந்த எண்ணையை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் இரவே இந்த எண்ணெயை தலையில் வேர்க்கால்களில் படும்படி நன்றாக மசாஜ் செய்து, அடுத்த நாள் காலை தலைக்கு குளித்து கொள்ளலாம்.

முடிந்தால், தலைக்கு இந்த எண்ணெயை தேய்ப்பதற்கு முன்பு கொஞ்சம் எண்ணையை மட்டும் தனியாக எடுத்து, ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அந்த வெது வெதுப்புடன் தலையில் தேய்ப்பது, மேலும் நல்ல பலனை கொடுக்கும். மூன்றி லிருந்து நான்கு மாதங்கள் விடாமல், வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தி பாருங்கள்.

hair-massage

நிச்சயமாக நல்ல பலன் தெரியும். வழுக்கை இடத்தில் கூட முடி வளர தொடங்கும். இடையில் விட்டுவிட்டு செய்தால் பலன் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஏற்படும். இடைவிடாமல் செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும். முயற்சி செய்து பாருங்கள்.