நம்பவே முடியல! வெறும் 1 பொருளை வைத்து, இந்த பொருட்களை எல்லாம் இவ்வளவு புதுசு போல, பளபளப்பாக சுத்தம் செய்ய முடியுமா?

cleaning3

Tip No 1:
உப்புத் தண்ணீராக இருக்கும் வீடுகளில் எவர்சில்வர் பாத்திரங்களை தேய்த்து கழுவினால், அந்தப் பாத்திரங்களில் தண்ணீர் வடியாமல் கொஞ்சம் நின்று விட்டால் கூட, வெள்ளைத் திட்டுக்கள் படிய தொடங்கி, சில்வர் பாத்திரம் பளபளப்பாக இருக்காது. ஒரு சிறிய கிண்ணத்தில் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், தண்ணீர், வினிகர் இந்த மூன்று பொருட்களையும் சம அளவோடு நன்றாக கலந்து விட்டு, ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த லிக்விடை வைத்து உங்கள் வீட்டு எவர்சில்வர் பாத்திரங்களை தேய்த்தால் பாத்திரங்கள் புதுசு போல பளபளக்கும்.

ever-silver-vessels

Tip No 2:
உங்க வீட்ல வெள்ளைத் துணிகள் எவ்வளவு துவைத்தாலும் அழுக்கு போகவில்லையா? தினம்தோறும் குளித்து விட்டு உடம்பை துடைக்கப் பயன்படுத்தும் தண்டில் ஈரம் படிந்த கெட்ட வாடை வீசுகிறதா? உங்கள் வீட்டில் இருக்கும் ஷாக்ஸை எவ்வளவுதான் துவைத்தாலும் அழுக்கு போகவில்லையா? துர்நாற்றம் வீசுகிறதா?

1/2 பக்கெட் அளவு வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரோடு 5 மூடி வினிகரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மூன்றிலிருந்து ஐந்து வெள்ளை துணிகளை இந்த தண்ணீரில் ஊறவைத்து, அதன் பின்பு துவைத்து பாருங்கள். துர்நாற்றமும் வீசாது. வெள்ளைத்துணியிலும் அழுக்கு சுத்தமாக போய்விடும்.

cleaning4

ஒரு சின்ன குளிக்கும் ஜக்கில், ஷாக்ஸ் மூழ்கும் அளவிற்கு, கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 2 மூடி அளவு வினிகரை ஊற்றி, அதன் பின்பு காலில் போடும் ஷாக்ஸை, ஊற வைத்து அதன் பின்பு துவைத்தால் ஷாக்ஸில் துர்நாற்றம் வீசாது. அழுக்கும் சீக்கிரமே நீங்கிவிடும்.

- Advertisement -

Tip No 3:
உங்கள் வீட்டில் வாஷிங் மிஷின் டிரம் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டுமா? மாதம் ஒருமுறை வாஷிங்மெஷினில் இரண்டு மூடி வினிகரை ஊற்றி, துணி எதுவும் போடாமல் வெறும் வாஷிங்மெஷினை ஓட விட்டால், வாஷிங் மெஷினில் இருக்கும் அழுக்கும் நீங்கிவிடும். துருப்பிடிக்காமல் உள்ளே இருக்கும் ட்ரம் பளபளப்பாக மாறும்.

cleaning5

Tip No 4:
உங்க வீட்டில் மரத்தால் செய்யப்பட்ட பர்னிச்சர்ஸ், கதவு, ஜன்னல் இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் எப்படி பளபளப்பாக துடைப்பது?  சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 ஸ்பூன் தண்ணீர், 1 ஸ்பூன் வினிகர் இந்த மூன்றும் போட்டு, கலந்து ஒரு சிறிய காட்டன் துணியில் அதைத் தொட்டு மரத்தால் செய்யப்பட்ட பொருட்களை எல்லாம் துடைத்தெடுத்தால் வார்னிஷ் அடித்தது போல பளபளப்பு கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள்.

gold

Tip No 5:
உங்களது தங்கநகை பொலிவிழந்து காணப்படுகின்றதா? ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் அளவு வினிகர், 1 ஸ்பூன் ஷாம்பு சேர்த்து தங்க நகைகளை போட்டு 1/2 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். அதன் பின்பு சிறிய பிரஷ் கொண்டு நகைகளை இலேசாக சுத்தம் செய்து, நல்ல தண்ணீரில் கழுவி காட்டன் துணியில் துடைத்து வைத்தால் போதும். நகை பாலிஷ் போட்டது போல பளபளக்கும்.

இதையும் படிக்கலாமே
இந்தப் பொங்கலுக்கு உங்க வீட்ட, இந்த 2 பொருளை வைத்து சுத்தம் செஞ்சு பாருங்க! கஷ்டமே இல்லாம உங்க வீடு பளபளப்பா மாறிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.