கோவில் கருவறையில் படமெடுத்து ஆடிய நாகம் வீடியோ

Snake in Temple

இறைவன் எப்படி மனிதர்களைப் படைத்து இந்த பூமியில் வாழ்ந்து அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கச் செய்தாரோ, அதுபோலவே விலங்குகளையும் படைத்து இப்புவியில் வாழச் செய்தார் அந்த விலங்குகளில் “பாம்புகள்” ஒரு தனி தன்மை வாய்ந்ததாகும். தனது பல்லில் இருக்கும் ஒரு துளி விஷத்தால் ஒரு விலங்கையோ, அல்லது ஒரு மனிதனையே கொள்ளும் ஆற்றல் வாய்ந்த நாகப் பாம்பை மனிதர்களின் உடலில் யோகத்தால் எழுப்பப்படும் “குண்டலினி” சக்தியாக உருவாக்கப்படுத்துகின்றனர் நமது சித்தர்கள். இத்தகைய அற்புதமான தெய்வாம்ச தன்மை கொண்ட ஒரு நாகம் ஒரு கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தந்ததை இங்கு காண்போம்.

இக்காணொளி கர்நாடக மாநிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இக்கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரால் தனது கைபேசி கேமராவில் பதிவு செய்யப்பட்டது. இதில் நன்கு வளர்ந்த மிக நீளமான நாகப் பாம்பு ஒன்று அக்கோவிலின் கருவறைக்கு அருகே வந்து, தனது படத்தை விரித்த படி பக்தர்கள் அனைவருக்கும் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறது.

பெரும்பாலான மக்கள் பாம்பென்றலே பயந்து நடுங்குவர் ஆனால் இக்கோவிலுக்கு வந்திருக்கும் பெண்களும், குழந்தைகளும் கூட அப்பாம்பைக் கண்டு அஞ்சாமல் அதை அந்த தெய்வத்தின் உருவாக கருதி வழிபடுகின்றனர். அதில் ஒரு பக்தர் அந்த நாகத்தின் அருகில் சென்ற போது கொத்துவது செய்து அவரை எச்சரிக்கை மட்டுமே செய்தது. நமது மதத்தில் நாகங்களுக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அனைத்துக்கும் காரகனாகிய “சிவபெருமான்” அவர் கழுத்தில் அமரும் நாகபாம்பிற்கு அந்த சிவபெருமானுக்கு கொடுக்கப்படும் மரியாதை அப்பாம்பிற்கும் கொடுக்கப்படுகிறது.

நாகப் பாம்புகள் இயற்கையாகவே நல்ல அதிர்வுகளை உணரக்கூடிய தன்மையுடையதாகும். அதனால் தான் பொதுவாக மனிதர்களையும், பிற விலங்குகளையும் தவிர்க்க விரும்புகிற நாகம், இக்கோவிலிலிருந்து வெளிப்படுகின்ற தெய்வீக அதிர்வுகளால் ஈர்க்கப்பட்டு, மக்கள் அனைவரும் இருக்கும் போதே இப்பாம்பு இக்கோவிலில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. அந்த தெய்வத்தின் செயல் என அங்கிருந்த பக்தர்கள் கருதினர்.