பழனி முருகன் கழுத்தை சுற்றி காட்சி தந்த நாகம் – வீடியோ

murugan with snake
- Advertisement -

இந்துக்களால் கடவுளாக வனாகக்கூடியது நாகம். அது மட்டும் அல்லது, சித்தர்களும் யோகிகளும் நகத்தின் வடிவில் அவ்வப்போது தன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் ஒரு கூற்று உண்டு. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பழனி தண்டாயுதபாணி போன்ற ஒரு சிலை இருக்கும் கோவில் ஒன்றில் நாகம், முருகன் கழுத்தை சுற்றியவாறு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. இதோ அதற்கான வீடியோ.

- Advertisement -
தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இக்காணொளியை உற்று நோக்குபவர்கள் ஒரு அதிசயத்தை காணலாம். அப்பிரகாரத்தை சுற்றி தமிழகத்தின் அறுபடை முருகன் கோவில்களின் விக்கிரகங்கள் இருந்தாலும், துறவி கோலம் பூண்ட பழனி மலை முருகன் விக்கிரகத்தின் மீதே அந்நாகம் ஏறி அமர்ந்து படம் விரித்து தன் அழகை காட்டுகிறது.

எந்நேரமும் யோகத்திலிருக்கும் சிவபெருமானின் கழுத்துக்கு அணிகலனாக இருக்கும் நாகத்திற்கு, அச்சிவபெருமானுக்கே மந்திர உபதேசம் செய்து “சிவகுருநாதன்” என்று பெயர் பெற்ற அவரின் மகனான முருகப்பெருமானின் மீது பக்தி ஏற்படாமல் இருந்தால் தான் அதிசயம்.

பொதுவாகவே, பாம்புகள் மனிதர்களைக் கண்டாலே ஊர்ந்து சென்று ஒளிந்து கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால் இக்காணொளியில் இந்த பாம்பு யாரைக் கண்டும் ஆஞ்சாமல் இருப்பதில் இருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது யாதெனில், எல்லாம் வல்ல இறைவனிடம் சரண் புகுந்தால் நாம், நம் வாழ்வில் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதே.

- Advertisement -