நூற்றுக்கணக்கில் சுற்றி திரியும் பாம்புகள் – பார்ப்பவரை மிரள வைக்கும் பாம்பு கோவில்

baambukovill

மலேசியாவின் பினாங்கு தீவில் உள்ள சன்கை குளாங் பகுதியில் விசித்திரமான ஒரு பாம்புக்கோவில் உள்ளது. உலகில் உள்ள பலவகை பட்ட பாம்புகளும் இந்த கோவிலில் ஆங்காங்கு வளைந்து நெளிந்து ஓடுகின்றன. சீன கட்டிடக்கலையில் கம்பீரமாக நிற்கும் இந்தக் கோவில், சூர் சோ காங் என்ற மன்னரின் நினைவாக 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

காங் மன்னர் பூச்சிகளிடமும் பாம்புகளிடமும் அன்பு பாராட்டியவர். அதோடு பலவகைப்பட்ட பாம்புகளும் பூச்சிகளும் அவரோடு அரண்மனையில் தங்கி இருந்ததாக வரலாறு கூறுகிறது.

தனது 65 வது வயதில் மன்னர் இறந்துவிட, அவரது நினைவாக கட்டப்பட்டது தான் இந்த பாம்பு கோவில். ஆரம்பத்தில் ஒரு கோட்டையாகவே இது கட்டப்பட்டுள்ளது அனால் பாம்புகள் இங்கு தானாக படையெடுத்து வந்ததால் இது பாம்புக்கோவிலாக மாறியுள்ளது.

பாம்புகளின் வரத்து அதிகமானதை அடுத்து பாம்புகள் தங்குவதற்கும், கோவிலை சுற்றுவதற்கும் பல வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. இதனால் கோவில் முழுக்க பாம்புகள் நெளிந்து கொண்டிருக்கின்றன.   இந்த கோவிலுக்குள் ஒரு பிரமாண்ட மண்டபம் உள்ளது.

- Advertisement -

இந்த மண்டபத்தின் நுழைவாயிலில் ஒரு பெரிய நெருப்பு மூட்டிய குழி உள்ளது. இதிலிருந்தும் வரும் புகையானது மண்டபத்தை சூழ்கிறது. இதனால் அங்கு உள்ள பாம்புகள் அமைதியாக செயல்படுகின்றன. மேலும் அவை அசையாமல் தூங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்த மண்டபத்தில் அமர்ந்தபடி தான் பக்தர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர். அப்படி வழிபாடு செய்கையில் பாம்புல்கள் அவர்களை நோக்கி ஊர்ந்து வந்தால், நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. அனால் இந்த நிகழ்வு அங்கு அவ்வளவு எளிதில் நடப்பதில்லை. ஒருசில பக்தர்களுக்கு மட்டுமே இந்த பாக்கியம் கிடைக்குமாம்.

மண்டபத்தில் வழிபாடு முடிந்ததும் கோவிலுக்கு பின்புறத்தில் உள்ள பாம்பு குலத்திற்கு பக்தர்கள் செல்கின்றனர். உலகின் பல கொடிய விஷமுள்ள பாம்புகள் தங்களது வாலை சுருட்டிக்கொண்டு இந்த குளத்தில் படுத்துகிடப்பதை நாம் எளிதாக பார்க்கலாம். அனால் அங்கு வழிபட செல்லும் எந்த பக்தர்களையும்  அந்த பாம்புகள் தொந்தரவு செய்வதில்லை என்பது தான் ஆச்சர்யம்.

மக்களின் வருகை பாம்புகளுக்கு தொந்தரவாக இருக்கும் என கருதி இங்கு வரும் கூட்டம் குறைந்து வருவதாக சிலர் கூறுகின்றனர். பண்டிகைகளின் போது பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கின்றது. பக்தர்கள் மந்திரத்தை உச்சரித்து தெய்வத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சீன அரசரான சோர் காங்கின் பிறந்த நாளின் கொண்டாட்டத்தின் போது கோயிலுக்கு ஒரு பயணம் மேற்கொள்கின்றனர்.

1950-ம் ஆண்டு வரை இந்த கோவிலில் உள்ள அனைத்து பாம்புகளுக்கும் விஷம் இருந்தது. அனால் அதன் பிறகு பக்தர்களின் பாதுகாப்பு கருதி விஷம் நீக்கப்பட்ட பாம்புகளே இங்கு இருக்கின்றன. விஷம் இருந்தபோதும் சரி, விஷம் நீக்கப்பட்ட பிறகும் சரி இந்த கோவிலில் உள்ள பாம்புகள் பக்தர்களை கடித்ததாக வரலாறு இல்லை. அந்த அளவிற்கு இங்குள்ள பாம்புகள் மனிதர்களை நேசிகின்றன. இந்தக் கோவிலில் நீண்டநாட்களாக வசித்துவந்த மலைப்பாம்புகளையும், நாகப்பாம்பு களையும் கோவிலுக்கு அருகில் ஒரு கண்காட்சி அமைத்து பராமரித்து வருகின்றனர்.

பிற உயிரினங்களை நாம் நேசித்தால் அவைகளும் நம்மை நேசிக்கும் என்பதற்கும் மிக சிறந்த உதாரணம் இந்த பாம்பு கோவில்.