சில பேர் தலைக்கு மேல் இருக்கும் வேலையை பார்க்கும் போது, பயந்து நடுங்குவார்கள். இந்த வேலையை எல்லாம் எப்படி செய்து முடிக்க போகின்றோமோ? என்று, சிந்திப்பதிலேயே பாதி நேரத்தை செலவு செய்து விடுவார்கள். சிந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த வேலையில் பாதியை செய்து முடித்திருக்கலாம். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். ஒரு போதும், ஒரு நொடி நேரத்தைக் கூட வீணாக்காதீங்க. போன நேரம் திரும்பி வரவே வராது.
லோ எனர்ஜி, லோ பேட்டரி, நெகட்டிவ் திங்கிங். இதுபோலவே உங்கள் வாழ்க்கையும் சோம்பேறித்தனத்தோடு சேர்ந்து நகர்கிறதா. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று துடிப்பவர்கள், உங்களை நீங்களே சுறுசுறுப்பாக மாற்றிக்கொள்ள, உங்களை சுற்றி இருக்கும் ஆராவை சுறுசுறுப்பாக செயல்பட வைக்க, நெகட்டிவ் எனர்ஜியை விடுவிக்க, செய்ய வேண்டிய ஒரு எளிமையான சூப்பர் மெத்தடை இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
சோம்பேறி தனம் விலக பரிகாரம்
ஒரு சின்ன வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய பெயரை எழுத வேண்டும். முழு பெயரையும் எழுதி விடுங்கள். இனிஷியல் போட்டு எழுதினாலும் தவறு கிடையாது. ஒரு கண்ணாடி பௌலில் தண்ணீர் ஊற்றி, கல்லுப்பு போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். பெயர் எழுதிய பேப்பரை, அந்த கண்ணாடி பவுலுக்குள் இருக்கும் உப்பு தண்ணீரில், வைத்து விட வேண்டும்.
அந்த பெயர் எழுதிய பேப்பரை உப்பு தண்ணீரில் போடும்போதே, உங்கள் மனதிற்குள் நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும். உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் எல்லாம் நீங்கிவிட்டது. சுறுசுறுப்பு உங்களுக்குள் வந்துவிட்டது. உங்களது ஆரா சுத்தமாகிவிட்டது. இந்த நிமிடத்தில் இருந்து வேலையில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருக்கப் போகின்றேன்.
எனக்கு எந்த ஒரு சோர்வும் ஏற்படாது. இதுபோல பாசிட்டிவ் ஆக யோசித்துக் கொண்டே பேப்பரை அந்த கல்லுப்பு தண்ணீரில் போட்டு உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு டேபிளுக்கு மேலே இந்த கண்ணாடி பவுலை வைத்து விட வேண்டும். ஏழு நாள் அந்த தண்ணீர், அதற்குள் இருக்கும் உங்களுடைய பெயர், அப்படியே இருக்கட்டும்.
இந்த ஏழு நாளும் உங்களுக்குள் வரும் மாற்றத்தை நீங்களே பாருங்கள். (ஏழு நாள் கழித்து அந்த தண்ணீரை, அந்த பேப்பரோடு எடுத்து வீட்டிற்கு வெளியே மண்பாங்கான இடத்தில் கொட்டி விடலாம். அப்படி இல்லை என்றால் அந்த பேப்பரை தண்ணீரில் கரைத்து சிங்கில் ஊற்றி விடுங்கள்).
சுறுசுறுப்புன்னா சுறுசுறுப்பு, சுறுசுறுப்புக்கே நீங்கள் சொந்தமாகி விடுவீர்கள். அப்படி ஒரு சுறுசுறுப்பு உங்களிடத்தில் இருக்கும். வேலையை எல்லாம் நேரத்திற்கு சரியாக முடித்துவிட்டு, சரியான சாப்பாடு சாப்பிட்டு, சரியான ஓய்வு எடுப்பீர்கள். இது சும்மா சொல்லலைங்க. இந்த ஐடியா நிஜமாவே சூப்பரா ஒர்கவுட் ஆகும். முழு சோம்பேறி. தோலோடு வாழைப்பழமாக நீங்கள் இருந்தால் கூட சரி, இந்த பரிகாரத்தை செய்தால் சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். தோலுரித்து வாழைப்பழத்தை சாப்பிட கூட சில சோம்பேறிகள் கஷ்டப்படுவார்கள்.
இதையும் படிக்கலாமே: செல்வ வளத்தை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி வழிபாடு
அதுதான் தோலோடு வாழைப்பழம் என்று சொல்லுவார்கள். உங்களுக்கு இந்த பரிகாரம் பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள். ஏதோ எங்களால் முடிந்த நல்லதை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுக்கு தெரிந்த நாலு பேருக்கு இந்த ஐடியாவை சொல்லுங்கள். உங்களுக்கும் நல்லது சீக்கிரம் நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.