இன்று சூரிய கிரகணம்: முழு விளக்கங்களும் – விதிமுறைகளும்.

surya-grahanam

சூரிய கிரகணம் வியாழன் டிசம்பர் 26, 2019: காலை 7.59 – 1.35 வரை

surya-grahanam

சூரிய கிரகணம் என்பது என்ன?
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. சந்திரன் பூமியை நீள் வட்டமாக சுற்றுகிறது அவ்வாறு சுற்றி வரும் போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வந்து நிற்கும் தருணத்தில் நிலவானது சூரியனை மறைத்து தன் நிழலை பூமியின் மீது விழ செய்கிறது இதை தான் சூரிய கிரகணம் என்கிறோம். ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நிகழும் சாதாரணமான சூரிய கிரகணம் இவ்வாண்டின் தனது கடைசி சூரிய கிரகணத்தை இன்று தொடங்கி இருக்கிறது.

தொடக்கம் முதல் முடிவு வரை:
தொடக்க நேரம் – காலை 7:59am
முழுமையாக தெரியும் நேரம் – 09:04am
உச்ச கட்ட நேரம் – 10:47am
முழுமையான கிரகணம் முடியும் நேரம் – 12:30pm
சூரிய கிரகணம் முடியும் நேரம் – 01:35pm

surya-grahanam

சூரிய கிரகணம் பார்க்கும் முறை:
பொதுவாகவே சூரியனை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. பார்க்கவும் முடியாது. ஏனெனில் அதன் ஒளிக்கற்றை நம் கண்களை கூசச் செய்யும். அதையும் மீறி சில வினாடிகள் பார்ப்பதால் கண்களில் உள்ள ரெட்டினா பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படியிருக்கும்போது சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது நம் கண்களுக்கு நல்லதல்ல. பார்வை இழக்க கூடிய அபாயம் உண்டு. வெறும் கண்களால் தானே பார்க்கக்கூடாது மாற்று வழியை உபயோகிக்கலாம் என்று பலர் தவறான கண்ணோட்டத்தில் சில வழிகளை பின்பற்றுகின்றனர். அது தவறான முறை ஆகும். அதற்க்கென்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட (சோலார் பில்டர்) எனப்படும் சூரிய வடிகட்டி என்னும் கண்ணாடியை பயன்படுத்தித்தான் பார்க்க வேண்டும். இந்த கண்ணாடியின் மூலம் நீங்கள் சாதாரணமாக பார்த்தால் ஒன்றும் தெரியாது ஆனால் சூரிய கிரகண நிகழ்வை நன்றாகவே பார்க்கலாம். சாதாரணமாக சூரியனைப் பார்க்க முடியாத நம்மால் கிரகணத்தின்போது நன்றாகவே பார்க்க முடியும் அதன் ஒளிக்கதிர்கள் நம்மீது விழுவதில்லை. எனவே புற ஊதாகதிர்கள் நேரடியாக விழி திரைக்கு சென்று ரெட்டினாவை பாதிக்கும் அதனால் தான் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

 solar-filter

நெருப்பு வளைய சூரிய கிரகணம்:
சூரிய ஒளியை சந்திரன் முழுமையாக மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும். சில சமயத்தில் முழுமையாக மறைக்காமல் ஒரு பகுதி வரை சென்று மறைக்கும் அதை பகுதி சூரிய கிரகணம் என்று கூறுவார்கள். இரண்டும் அல்லாமல் விளிம்பு வரை சென்று முழுமையாக மறைக்காமல் மைய பகுதியை மட்டும் மறைத்து நிற்கும் அது பார்ப்பதற்கு வளையம் போன்று தெரியும் இதைத்தான் (ring of fire) என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. நாம் நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்கிறோம். இது போன்ற அதிசய நிகழ்வை இன்று நீங்கள் பார்க்காமல் விட்டுவிட்டால் இத்துடன் 21 ஆண்டுகள் கழித்து 2040 இல் தான் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

Grahanam

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்:
கேதுவின் ஆதிக்கம் கொண்ட மூல நட்சத்திரத்தில் இந்த சூரிய கிரகணம் நிகழ்வதால் மூல நட்சத்திரத்திற்கு முன்னாலுள்ள கேட்டை நட்சத்திரம் அதற்கு பின்னால் வருகின்ற பூராடம் நட்சத்திரமும், கேதுவின் ஆதிக்கம் கொண்ட அஸ்வினி மற்றும் மகம், மூலம் நட்சத்திரக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள் ஆவார்கள்.

Planets

எங்கு பார்க்கலாம்?
வளைய சூரியகிரகணம்:
தமிழகத்தில் ஊட்டி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, சிவகங்கை, கரூர் ஆகிய மாவட்டங்களில் வளைய சூரியகிரகணம் தென்படும். இந்தியாவில் மற்ற அனைத்து இடங்களிலும் பகுதி சூரிய கிரகணம் கண்டு ரசிக்கலாம். சென்னையில் பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையிலும் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

birla

நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள்:
நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சூரிய கிரகணத்தின் போது கூறப்படுகின்றன விதிகளை கண்டு அஞ்சத்தேவையில்லை. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பது மற்றும் வெளியில் அனாவசியமாக செல்வது இவை இரண்டையும் தவிர நீங்கள் எப்போதும் போல் சாதாரணமாக கிரகண விதிமுறைகள் பின்பற்றிவிட்டு தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம்.

 surya-grahan

கிரகண விதிமுறைகள்:
கிரகணத்தின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளாக சிலவற்றை கூறுகின்றனர். கிரகணம் தொடங்குவதற்கு முன்பு குளித்துவிட வேண்டும். கிரகணம் முடியும் வரை உணவு எடுத்துக் கொள்ளக்கூடாது. உணவு பொருட்களை மூடி வைக்க வேண்டும். கிரகணம் நடைபெறும் சமயத்தில் தெய்வ சிந்தனையில் முழுமையாக ஈடுபட்டு உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை உச்சரித்தால் பல மடங்கு பலன்களை பெறமுடியும். கிரகணம் முடிந்த பின்பு வீட்டை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் பின்னர் கடலிலோ அல்லது வீட்டில் வாளியில் கல் உப்பு போட்டு குளித்து விடவேண்டும். கிரகணத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மற்றும் பாதிக்கப்படக்கூடிய ராசிக்காரர்கள் தானம் செய்வது போன்றவை பரிகாரமாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே
சூரிய கிரகணம் டிசம்பர் 2019: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.