சூரிய கிரகணம் டிசம்பர் 2019: பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்.

surya-grahanam
- Advertisement -

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் விகாரி வருடம், மார்கழி மாதம் 10ஆம் தேதி (26.12.2019) வியாழக்கிழமை அன்று ஏற்படுகின்றது.

சூரிய கிரகணம் ஆரம்பமாகும் நேரம் 8.09 AM
சூரிய கிரகணம் அதிகபட்சமாகும் நேரம் 9.34 AM
சூரிய கிரகணம் முடியும் நேரம் 11.19 AM

- Advertisement -

சூரியன், சந்திரன் மற்றும் பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நேரத்தில் ஏற்படுவதுதான் சூரிய கிரகணம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் நுழைவதன் மூலம் சந்திரனின் நிழலானது சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர விடாமல் தடுத்து விடுகிறது. வரும் சூரிய கிரகணத்தினை உலகில் பல பகுதிகளில் இருந்தும் காணமுடியும். குறிப்பாக தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், காரைக்குடி, திண்டுக்கல், மதுரை, பழனி, தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்ற  போன்ற ஊர்களில் தெளிவாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரகண சமயத்தின் போது சூரியனின் கதிர்கள் மறைக்கப்படுவதால் விண்வெளியிலிருந்து கெட்ட கதிர்வீச்சுகள் பூமியை வந்தடையும். இந்த கெட்ட கதிர்வீச்சில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காகத்தான் கிரகணத்தின்போது மனிதர்கள் வெளியில் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். பொதுவாக கிரகண காலங்களில் பறவைகள் மிருகங்கள் கூட வெளியில் வராது. ஆனால் இந்த நவீன காலகட்டத்தில் நம் முன்னோர்களின் அறிவுரையை மறந்துவிட்டு நாம் வெளியில் செல்லத்தான் செய்கின்றோம். ஆனால் இதன் மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

ஆனால் இந்த கிரகணத்தை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். இறைவனின் நாமத்தை நம் மனதிற்குள் உச்சரிப்பதற்கு இந்த நாள் மிகவும் சிறந்தது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மந்திர சாஸ்திரத்தின்படி கிரகண சமயங்களில் நாம் ஒருமுறை உச்சரிக்கப்படும் மந்திரமானது லட்சம் முறை உச்சரிப்பதற்க்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது. கிரகண தினத்தன்று நாம் வெளியில் செல்லாமல் நம் பூஜை அறையில் அமர்ந்தபடி அந்த இறைவனின் நாமத்தை மனதிற்குள் உச்சரித்து வந்தாலே போதும் எந்த தீமையும் நடக்காது.

கர்ப்பிணி பெண்கள், பலவீனமாக உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கிரகண காலத்தின்போது வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது மிகவும் நல்லது. கிரகண காலத்தின்போது ஏற்படும் கெட்ட கதிர்வீச்சால் இவர்களுக்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என்பதால் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

சூரிய கிரகணத்தின் போது உணவு அருந்தக்கூடாது. வீட்டில் எதையும் சமைக்கவும் கூடாது. வீட்டின் அனைத்து ஜன்னல் கதவுகளை மூடி வைப்பது நல்லது. கிரகணத்தினை வெறும் கண்களால் காண்பதை தவிர்ப்பது நல்லது.

சிறிய குழந்தைகளுக்கு தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதில் தவறு இல்லை.

நம் வீட்டில் இருக்கும் உணவு பண்டங்கள் கெட்ட கதிர்வீச்சின் மூலமாக வீணாகாமல் இருக்க தர்ப்பைப் புல்லை அதில் சிறிதளவு போட்டு வைக்கலாம். கெட்ட பாக்டீரியாக்களை தவிர்க்கும் சக்தியானது இந்த தர்ப்பைப் புல்லுக்கு அதிகமாகவே உள்ளது.

இந்த கிரகண காலத்தில் உங்களால் முடிந்தவரை உங்கள் மனதுக்குள் ‘ஸ்ரீராமஜெயம்’ மந்திரத்தை உச்சரிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

கிரகணம் முடிவடைந்த பின்னர் வீட்டை கழுவி சுத்தம் செய்துவிட்டு வீட்டில் உள்ள அனைவரும் குளித்து முடித்த பின்பே உணவு அருந்துவது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இந்த சூரிய கிரகணம் முடிந்த உடன் பரிகாரம் செய்யவேண்டிய தோஷ நட்சத்திரங்கள். அஸ்வினி, மகம், மூலம், கேட்டை, பூராடம். இந்த நட்சத்திரத்தை கொண்டவர்கள் கிரகணத்தின் போது அந்த இறைவனின் மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே இருப்பது நன்மையை தரும்.

இந்த நட்சத்திரத்தை கொண்டவர்கள் கிரகணம் முடிந்த பின்பு குளித்து முடித்து விட்டு கோவிலுக்குச் சென்று அந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வருவது சிறந்த பலனை கொடுக்கும்.

சூரிய கிரகணத்தின் போது இந்த மந்திரத்தை இறைவனை நினைத்து உச்சரித்துக் கொண்டிருந்தால் நமக்கு எந்தவித தாக்கமும் ஏற்படாது.

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.

இதையும் படிக்கலாமே
சனிப்பெயர்ச்சி 2020: அதிர்ஷ்டம் பெறவிருக்கும் டாப் 5 ராசிகள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Surya grahanam 2019. Surya grahanam timings 2019. Surya grahan 2019 in Tamil. Surya grahan december 2019 in Tamil.

- Advertisement -