நாளை கார்த்திகை மாத முதல் சோமவாரம் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அனைவரும் எம்பெருமானை மனதார நினைத்து, ‘ஓம் நமசிவாய’ சொல்லுங்கள். நாளை அனைவரும் ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். இது தவிர ஒரு சிலருக்கு நாளைய தினம் ஈசன் வழிபாடு ஒரு வரப் பிரசாதம். தீர்க்க முடியாத குழப்பத்தில் இருப்பவர்கள், நாளைய தினம் ஈசனை வழிபாடு செய்தால் மனக்குழப்பம் நீங்கும். காரணம் என்ன தெரியுமா.
சோமவாரம் ‘சோமன்’ என்றால் சந்திரனை குறிக்கிறது. சந்திரனை, சிவபெருமான் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கிறார். சந்திரன் என்பவன் மனோகாரகன். ஒருவர் ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியில்லை என்றால் அவன் வாழ்க்கையில் மன குழப்பம் அதிகமாக இருக்கும். சிந்தனை நிலையாக இருக்காது. ஒருவனுடைய வாழ்க்கையில் வரும் நல்லது கெட்டதை நிர்ணயிப்பது ஜாதக கட்டத்தில் இருக்கும் சந்திரனை வைத்து தான்.
எம்பெருமானோ அந்த சந்திரனை தலையில் சூடி வைத்துள்ளான். அந்த அம்பாளும் சந்திர பகவானை தலையில் சூடி இருக்கின்றாள். இப்படி இருக்கும்போது ஈசன் அம்பாள் இருவரையும் நாளைய தினம் வழிபாடு செய்ய நம்முடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் சந்திரன் பலமடைவான். எவர் ஒருவருக்கு ஜாதக கட்டத்தில் சந்திரன் நீச்சமாக இருக்கிறதோ, அவர்கள் நாளைய தினம் ஈசனை வழிபாடு செய்ய வேண்டும்.
சந்திர திசை நடப்பவர்கள் நாளை ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். எப்போதுமே மனக்குழப்பத்தில் இருப்பவர்கள் நாளை ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசையில் பிறந்தவர்கள், அமாவாசைக்கு முன்பு மூன்று நாட்களில் பிறந்தவர்கள், அமாவாசைக்கு பின்பு மூன்று நாட்களில் பிறந்தவர்கள், நாளை கட்டாயம் ஈசனை வழிபாடு செய்யுங்கள். யாருக்கெல்லாம் வாழ்வில் சந்திர பகவான் ஒரு பிரச்சினையாக இருக்கிறார், அவர்களெல்லாம் நாளை ஈசன் வழிபாடு செய்யுங்கள்.
உங்கள் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறைய தொடங்கும். நாளை திங்கட்கிழமை எல்லோருக்கும் வேலை பளு இருக்கும் இருப்பினும் வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி, கண்களை மூடி ‘ஓம் நமசிவாய ! ஓம் நமசிவாய’ என்று சொன்னாலும் அந்த ஈசனின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று ஈசனை வழிபாடு செய்யுங்கள். சங்கு அபிஷேகத்தில் கலந்து கொள்ளுங்கள். சங்கு அபிஷேகத்தை கண் குளிர பார்த்தாலே கோடி புண்ணியம் உங்களுக்கு. ஈசனின் பாதத்தில் இடம் கிடைக்கும்.
கார்த்திகை சோமவாரம் இருப்பதன் பலன்
சில பேருக்கு நல்லது தங்களுடைய கையில் வருவது போல இருக்கும், அந்த நல்லது கையில் வந்து விட்டது என்றே நினைப்போம். ஆனால் கைக்கு எட்டிய விஷயம் வாய்க்கு எட்டாமல் போய்விடும். கடைசி நிமிடத்தில் நமக்கு வரும் முன்னேற்றத்தை காலமும் நேரமும் தடை செய்து விடும்.
நல்ல வேலை கிடைக்காமல் சில பேர் கஷ்டப்படுவார்கள், நல்ல மன வாழ்க்கை அமையாமல் சில பேர் கஷ்டப்படுவார்கள், சில பேருக்கு திருமணமே நடந்திருக்காது, திருமணம் நடந்து குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கும், இதுபோல வாழ்க்கையில் ஒரு நல்லதை கூட நான் பார்த்ததே இல்லை, என் வாழ்க்கையில் நல்லதற்கு இடமே இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் நாளைய தினம் ஈசன் பாதத்தை இறுக்கப்பற்றிக் கொண்டால், உங்களுக்கு தேவையானது நிச்சயம் கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: நடக்காத காரியத்தையும் நடத்தி காட்டும் சோமவார வழிபாடு
அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம்பிக்கை ஒன்றை மட்டும் மூலதனமாக வைத்து நாளை ஈசன் வழிபாடை செய்யுங்கள். எவர் ஒருவர் நம்பி இந்த வழிபாட்டை மேற்கொள்கிறீர்களோ, அவர்களுக்கு ஏமாற்றம் நிச்சயம் கிடைக்காது. இதுநாள் வரை வாழ்க்கையில் இருந்த ஏமாற்றத்திலிருந்து வெளிவந்து, சந்தோஷமான வாழ்க்கையை பெற இந்த நாள் ஒரு வரப் பிரசாதம். தவறவிடாதீர்கள் எம்பெருமான் யாரையும் கைவிட மாட்டார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.