சோம்பலை விலக்கி சுறுசுறுப்பை தரும் பரிகாரம்

sombu
- Advertisement -

ஒரு மனிதனுக்கு கஷ்டம் வருவதற்கு முதல் காரணம் இந்த சோம்பேறி தனம் தான். பிளான் எல்லாம் பக்காவா போடுவாங்க. ஆனா ஒரு வேலையை கூட உருப்படியாக செய்ய மாட்டாங்க. அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை சரியாக செய்யாமல் பெரிய மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். இன்னைக்கான வேலையை இன்னைக்கே முடிச்சா தான், நாளைக்கான வேலையை நாளைக்கு பார்க்க முடியும்.

இன்னைக்கான வேலையை சரியாக செய்யாதபோது, நாளைக்காண வேலை இருட்டிப்பாக சேர்ந்து விடும். அப்போது என்ன ஆகும். அடுத்த அடுத்த நாள் வேலை கெட்டுப் போகும். அந்த வேலையை சரியாக முடிக்கவில்லையே என்ற மன அழுத்தம் தான் நமக்கு ஏற்படும். இதற்கெல்லாம் முதல் காரணம் என்ன சோம்பேறித்தனம். முதல் நாள் செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் விட்டதுதான் இதற்கு காரணம். சரி இந்த நிலைமை மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் வரும். சோம்பேறித்தனம் இல்லாத மனிதர்கள் இல்லை.

- Advertisement -

ஆனால் தினமும் சோம்பேறித்தனமாக இருப்பது தான் தவறு. உங்களுக்கு தினம் தினம் சோம்பேறித்தனமாக இருக்கிறதா. காலையில் கண்விழிக்கவே முடியலையா. அப்படியே கண்விழித்தாலும் வேலையை சரியாக செய்ய முடியாமல் சோம்பலாகவே இருக்கிறீர்கள் என்றால் இந்த பரிகாரம் உங்களுக்காக. இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்ய தொடங்கி விட்டால், தினமும் காலையில் சுறுசுறுப்பாக எழுந்து தினமும் சுறுசுறுப்பாக உங்கள் வேலையை செய்ய தொடங்கிடுவீங்க.

சோம்பலை நீக்கும் சோம்பு பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு சிறியதாக நாம் ஒரு முடிச்சு தயார் செய்ய வேண்டும். மெல்லிசாக இருக்கும் காட்டன் துணையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இதன் உள்ளே வைக்கக்கூடிய பொருளின் வாசம் வெளியே நல்லா வீசணும். அந்த அளவுக்கு காட்டன் துணி ஒன்று தேவை. அதன் உள்ளே 1/2 கைப்பிடி அளவு வரமல்லி, தனியா என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை வையுங்கள்.

- Advertisement -

கூடவே சோம்பு 1 ஸ்பூன், பச்சை கற்பூரம் 1 சிறிய துண்டு, வைத்து 1 லவங்கம் வைத்து, இதை முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இரவு தூங்கும் போது இந்த முடிச்சை தலையணைக்கு அடியில் வைத்து விடாதீர்கள். தலையணைக்கும் மேல் பக்கத்தில் வைக்கவும். இல்லது ஓரமாக ஏதாவது ஒரு இடத்தில் வைக்கணும்.

நீங்க தூங்கும் போது இந்த சுவாசம் உங்களுடைய மூக்கில் படும்படி இருக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களும் சேர்த்த வாசத்தை சுவாசிக்கும் போது, உங்களுடைய உடம்பு புத்துணர்ச்சியாகும். சோம்பலை நீக்கி காலையில் சோம்பேறித்தனம் இல்லாமல் எழுந்து உங்கள் வேலையை பார்ப்பதற்கு இந்த ஒரு முடிச்சே போதும். பழைய முடிச்சில் வாசம் நீங்கும் வரை அப்படியே வைத்திருக்கலாம்.

- Advertisement -

வாசம் குறையும் பட்சத்தில் உள்ளே இருக்கும் பொருட்களை கால் படாத இடத்தில் போட்டு விட்டு, மீண்டும் புதிய பொருட்களை வைத்து கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்குங்கள் இதனால் உங்களுடைய மன அழுத்தம் குறைந்து இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். அது மட்டும் இல்லாமல் காலையில் கண்விழித்து வேலை செய்ய எந்த ஒரு தடையும் உங்களை நெருக்காது. தெய்வீக ஆற்றலும் உங்களோடு எப்போதுமே துணையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் கருமஞ்சள் பரிகாரம்

இந்த பொருட்களுக்கு இருக்கக்கூடிய மகத்துவம் அப்படிப்பட்டது. வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தால் கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை வரப் பிரசாதமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து 48 நாள் செய்து பாருங்கள். வாழ்க்கையில் நாம் நம்ப முடியாத நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -