2000 ஆண்டுகள் பழைமையான கோவிலில் அண்டார்டிகா பனிமலை குறித்த கல்வெட்டு

temple-1
- Advertisement -

உலகின் மிகப்பழமையான மதங்களில், பலவிதமான சோதனைக் காலகட்டங்களைத் தாண்டி, இன்று வரை நிலைத்து நிற்கும், நம் நாட்டின் பாரம்பரிய மதம் “சனாதன தர்மமாகிய” இந்து மதம். மனிதனின் உயர்ந்த லட்சியம் ஆன்மிகம் தான் என்றாலும், அம்மனிதன் இப்பூமியில் வாழ்வதற்கு உதவும் மருத்துவம், கணிதம், வானியல் சாத்திரம், விஞ்ஞானம் போன்றவற்றையும் போற்றி வளர்த்தது இம்மதம். உலகின் மற்றப் பகுதிகளில் மதத் தலைவர்களால் அறிவியல் வளர்ச்சி நசுக்கப்பட்ட போது, ஆன்மிகத்தோடு சேர்த்து அறிவியல் விஞ்ஞானத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட மதம் இந்து மதம்.

somnath temple pillar

குஜராத் மாநிலத்தில், வேராவல் மாவட்டத்தில் கடற்கரையோரம் இருக்கும் கோவில் தான் ‘சோம்நாத் கோவில்”. வரலாற்று நெடுக பல்வேறு காலகட்டத்தில், பல அந்நியப் படையெடுப்பாளர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு உருக்குலைந்த இக்கோவில் இறுதியாக 1950 ஆம் ஆண்டு இன்றைய நிலையில் அப்போதைய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. சிவபெருமானுக்கும் அவர் தலையில் சூடியிருக்கும் சந்திரனுக்கும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாலய இறைவன் “சோமநாதர்” என்றழைக்கப்படுகிறார். இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க சிவாலயங்களில் ஒன்றான இக்கோவில் இந்தியாவின் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஜோதிர்லிங்க கோவிலாகும்.

- Advertisement -

இக்கோயிலிலுள்ள ஒரு ஆச்சர்யமான அம்சம் என்னவென்றால், இக்கோவிலின் கடற்கரையை ஒட்டிய சுற்றுச் சுவர் அருகில் “பானஸ்தம்பம்” எனப்படும் ஒரு தூண் நிறுவப்பட்டுள்ளது. அத்தூணில் “இத்தூணிற்கு தெற்காக நேர்கோட்டில் மனிதன் வாழும் எந்த ஒரு நிலப்பரப்பும் இல்லை” என்பதாக ஒரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

somnath temple pillar

இவ்வாசகத்தின் உண்மைத்தன்மையை புவியியல் வரைபடம் துணைக்கொண்டு ஆராய்ந்தோமேயானால் உண்மையில் இத்தூணுக்கு தெற்கே நேர்கோட்டில் இருப்பது தென்துருவப் பகுதியான “அண்டார்டிகா” பகுதி மட்டுமே. அண்டார்டிகாவில் சிறய அளவில் நிலப்பகுதி இருந்தாலும் அதன் பெரும்பாலானப் பகுதிகள் உறைந்த பனிக்கட்டிகளால் ஆனது. மேற்குலக நாடுகள் நவீன விஞ்ஞானத்தின் துணைகொண்டு இந்த அண்டார்டிகா பகுதியை கண்டறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர் என்பது வியப்பே. இத்தகைய பல அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்களும், ஞானிகளும் நிகழ்த்தியிருந்தாலும், அவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு நம்மிடம் இருப்பது வேதனையான விஷயம் தான்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
இறைவனால் உருவாக்கப்பட்ட அதிசய அருவி – இந்தியாவில் எங்குள்ளது தெரியுமா ?

English Overview:
Here we have some details about Somnath temple pillar in Tamil. This pillar was constructed several hundreds year ago. The beauty in it is, it has details about Antarctica. This temple is also called as Somanath temple in Tamil

- Advertisement -