துறவியின் தாகம் தீர்க்க இறைவன் உருவாக்கிய அருவி எங்குள்ளது தெரியுமா ?

Sivan-aruvi-1

சமீபக் காலமாகவே “கர்நாடகா” என்ற பெயரைக் கேட்டாலே நமக்கு நினைவிற்கு வருவது “காவிரி நதியும்”,அதனை முன்வைத்து நடைபெறும் அரசியலும் தான். இன்றைய கர்நாடக மாநிலம் தகவல் தொழில்நுட்பத்திற்கும், மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்களின் சந்தன மரக் காடுகளுக்கும், புகழ் பெற்றிருந்தாலும் தமிழகத்திற்கு எப்படி குற்றாலம், சுருளி போன்ற அருவிகளோ, அதுபோல ஆன்மிகம், சுற்றுலா காரணங்களுக்காக செல்லத்தக்க வகையில் பல அருமையான அருவிகள் இக்கர்நாடக மாநிலம் கொண்டுள்ளது. அதில் சில இறைவனானும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.

baba budangiri

மாணிக்யதாரா அருவி :

இதுவும் கர்நாடக மாநில சிக்மகளூரு மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னொறு காலத்தில் பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு இஸ்லாமிய ஞானி இப்பகுதிக்கு வந்த போது குடிக்க நீரின்றி சிரமப்பட்டார். அப்போது அவர் குடிநீருக்காக இறைவனை, வேண்டிய போது இறைவனால் இந்த அருவி அவருக்கு தண்ணீர் கொடுக்க உருவாக்கியதாக நம்பப்படுகிறது. எனவே ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த அருவியை புனிதமானதாக எண்ணி இதில் நீராடுகின்றனர். இப்படிச் செய்வதால் தங்களின் பல குறைகள் நீங்குவதாக கூறுகின்றனர்.

கல்ஹட்டி அருவி:

இம்மாநிலத்தின் சிக்மகளூரு மாவட்டத்தில் இந்த அருவி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மைசூரின் மன்னரான 4 ஆம் கிருஷ்ணா ராஜ உடையாரின் கோடை வாசஸ்தலமாக இது விளங்கியது. இங்கு விஜயநகர மன்னர்கள் கட்டிய ஆலயம் ஒன்று உள்ளது. அகத்திய முனிவர் இத்தலத்தில் சில காலம் தங்கி தவம் புரிந்ததால் மக்கள் இங்கு வழிபட்டு செல்கின்றனர். மலையில் ட்ரெக்கிங் என்ற நடைப்பயிற்சி செய்வோர்க்கு ஏற்ற இடம்.

- Advertisement -

லட்சுமண தீர்த்த அருவி:

இந்த அருவி கர்நாடகவின் குடகு, மற்றும் கேரளாவின் வயநாடு மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதற்கு “இருப்பு அருவி” என்று மற்றொரு பெயரும் உண்டு. ராமாயணக் காலத்தில் ராமனும், லக்ஷ்மணனும் சீதாவைத் தேடி இக்காட்டின் வழியே சென்றுகொண்டிருந்த போது, ராமருக்கு தாகமேற்பட்டது. அப்போது அவரின் தாகத்தைத் தீர்க்க லட்சுமணனால் உருவாக்கப்பட்டது இந்த அருவி. அதனால் இது லட்சுமண தீர்த்தம் என்று பெயர் பெற்றது.

இதையும் படிக்கலாமே:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவன் தவம் செய்த குகை – வீடியோ

English Overview:
There are many famous falls in karnataka. In that few were created by God for some auspicious purpose. Some of theme were listed above.