சொந்த வீடு யாருக்கெல்லாம் அமையும் அதற்கான பரிகாரங்கள் என்ன

sevvai kiragam

நமது வாழ்வில் மிகுந்த ஆதிக்கம் செலுத்துவது விண்ணில் இருக்கும் நவகிரகங்கள் ஆகும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அவனது கர்ம வினைகளுக்கேற்ற பலன்களை அனைத்து கிரகங்களும் சரியான காலத்தில் வழங்குகின்றன. அந்த வகையில் செவ்வாய் பகவான் தரும் சில பலன்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

chevvai

செவ்வாய் போர் கிரகம் என ஜோதிட சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஜாதகத்தில் “மேஷம், விருச்சிகம் மற்றும் மகர” ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கம் கொண்டவர்கள் ஆவார்கள். எனவே இந்த ராசியில் பிறந்தவர்கள் வீரம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியடைபவர்களாக இருப்பார்கள். நியாயத்திற்காக சண்டையிடும் குணமுடையவர்கள்.

நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள் என்பதால் ராணுவம், காவல் துறை போன்ற துறைகளில் ஈடுபட்டு சேவை செய்வர். செவ்வாய் பகவான் பூமிக்கு அதிபதியாவார். பொதுவாக ஒரு நபருக்கு வீடு, நிலம் போன்ற அசைய சொத்துக்கள் சொந்தமாக அமைய அவரது ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மற்ற எந்த ராசியினரை விடவும் மேஷம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு சொந்த வீடு கட்டி குடிபுகும் யோகம் மற்றும் சொந்த நிலம் வைத்திருக்கும் யோகம் அதிகம் உள்ளது.

house

இந்த ராசியினர் தங்களுக்கு பெருமளவு பொருளாதார வசதியில்லையென்றாலும், தங்களின் உழைப்பில் வரும் செல்வத்தை சிறுக சிறுக சேர்த்தாவது தங்களுக்கான சொந்த வீட்டை கட்டி முடிப்பார்கள். அதிலும் செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியான மகர ராசியினருக்கு சொந்த வீட்டோடு, சொந்த நிலங்களையும் பெறும் யோகம் அதிகம் உள்ளது.

- Advertisement -

navagragham

பரிகாரம்:
அனைத்து ராசியினரும் தங்களுக்கு சொந்த வீடு அல்லது நிலம் அமைய செவ்வாய் கிழமை தோரும் நவகிரகங்களில் செவ்வாய் பகவானுக்கு விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். அல்லது செவ்வாய் தோரும் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் விரைவிலேயே சொந்த வீடு, நிலம் போன்றவற்றை அடையும் யோகம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
புதன் கிரக பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை அறிய எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Veedu katta pariharam in Tamil or sondha veedu vanga pariharam in Tamil.