இந்த தெய்வத்தை 1 முறை, இப்படி வழிபாடு செய்தால் போதும். நீங்கள் தொழில் அதிபராகி, கோடிஸ்வரராகி, சொந்தத் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது நிச்சயம்.

sivan

சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாகிவிட முடியாது. நிறைய பேர் சொந்த தொழில் செய்து கடனாளிகள் ஆன கதைகளும் உண்டு. உங்களுக்கு சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளதா. உங்களுடைய ஜாதகத்தை உங்களுடைய குடும்ப ஜோசியரிடம் கொடுத்து சொந்த தொழில் யோகம் இருக்கிறதா என்பதை கேட்டுக்கொண்டு அதன் பின்பு சொந்தத் தொழில் தொடங்குவது நல்லது. ஏனென்றால் அதிகப்படியான நஷ்டம் ஏற்பட்ட பின்பு சிந்திப்பதில் ஜாதகம் பார்ப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

pudhan

சிலருக்கு சொந்த தொழில் நல்ல லாபத்தை கொட்டிக் கொடுக்கும். சிலருக்கு சொந்த தொழில் ராசியாக அமையாது. இதற்கு என்ன காரணம். ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் வலுவாக இருந்தால் சொந்த தொழிலை லாபத்தோடு நடத்தி செல்ல முடியும் என்பதை பற்றிய பொதுவான சில ஆன்மீக ரீதியான தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் ஒருவருடைய ஜாதக கட்டத்தில் புதன் பகவானும், சந்திர பகவானும் வலுவாக இருக்க வேண்டும். இவர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைத்து விட்டால், அந்த ஜாதகக்காரர்கள் தொட்டதெல்லாம் நிச்சயமாக வெற்றியடையும். சில பேருக்கு மண்ணை கையில் எடுத்துக்கொண்டால் கூட அது பொன்னாக மாறும் என்று சொல்லலாம்.

chandran

புதனும் சந்திர பகவானும் உங்களுக்கு வலுவிழந்து இருந்தால் அவர்களை எப்படி வலுவாக மாற்றுவது. இதற்கு ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறைகளை தெரிந்து கொள்வோமா? இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். வியாபாரத்தில் இருக்கக்கூடிய கஷ்டங்களிலிருந்து படிப்படியாக மீண்டு படிப்படியாக முன்னேற்றத்தை அடைந்து படிப்படியாக லாபத்தை சம்பாதிக்க தொடங்கிவிடலாம்.

- Advertisement -

புதன் கிரகத்திற்கு உரியவர் என்றால் அவர் விஷ்ணு பகவான். சந்திரன் என்பது நீரை குறிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. நீர்நிலைகளின் அருகில் அமைந்திருக்கும் பெருமாளை சனிக்கிழமைகளில் வழிபாடு செய்துவர வேண்டும். குளத்தின் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் கோவில்களுக்கு செல்லவேண்டும். உங்களுடைய ஊருக்கு அருகில் இப்படிப்பட்ட கோவில் எங்கு இருந்தாலும் அந்த கோவிலுக்கு மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து சென்று பெருமாளுக்கு துளசி மாலையை அணிவித்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து வர வேண்டும். மூன்று வாரங்கள் முடிந்த பின்பும் நீங்கள் சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாட்டை தொடர்ந்து மேற் கொள்ளலாம் தவறில்லை. இதேபோல் வழிபாட்டை புதன்கிழமையிலும் செய்து வரலாம்.

kamatchi-amman

இதோடு சேர்த்து சந்திரனை பலப்படுத்த அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சிவன் கோவில்களில் இருக்கக்கூடிய அம்மனுக்கு மரகதப் பச்சை நிறத்தில் புடவை அணிவித்து குங்கும அர்ச்சனை செய்து வாசனை மிகுந்த மலர்களை வாங்கிக் கொடுத்து தொடர்ந்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்து வந்தாலும் உங்களுடைய வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதேபோல் அம்மன் வழிபாட்டை பௌர்ணமி தினங்களில் செய்வது மேலும் சிறப்பானது.

perumal

உங்களுடைய ஜாதக கட்டத்தில் சொந்த தொழில் செய்யும் யோகம் இல்லை என்றாலும் அல்லது புதன் பகவான் சந்திர பகவான் நீசம் அடைந்து இருந்தாலும் சரி, அதை சரி செய்ய ஆன்மீக ரீதியாக இந்த இரண்டு வழிபாடுகளும் போதும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பெருமாள் கோவிலுக்கு செல்லும்போது முடிந்தால் மூன்று வாரங்களில் ஏதாவது ஒரு வாரம் வெள்ளை நிறபட்டு ஆடையை பெருமாளுக்கு வாங்கி சாத்துவது மேலும் சிறப்பை சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.