- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநமக்கென சொந்த வீடு அமைய செவ்வாய் பகவானுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயத்தை அனைவரும்...

நமக்கென சொந்த வீடு அமைய செவ்வாய் பகவானுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

- Advertisement -

நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ஆதிக்கத்தை நம் மீது செலுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் முக்கியமாக இருக்கும் செவ்வாய் பகவான் செலுத்தும் ஆதிக்கம் தான் நம்மை வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி கொண்டே செல்கிறது எனலாம். எல்லோருக்குமே நமக்கென ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்கிற கனவும், லட்சியமும் இருக்கும். ஏற்கனவே சொந்த வீடு வைத்திருந்தாலும் மென்மேலும் வீடு கட்ட வேண்டும் என்கிற பேராசையும் இருக்கும். நிலம், வீடு போன்றவற்றை அடைவதற்கு செவ்வாய் பகவான் உடைய அருள் வேண்டும். எனவே செவ்வாய் பகவானின் அருள் பெறவும், நமக்கென சொந்த வீடு அமையவும் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் என்ன? என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sevvai

எந்த ஒரு மனிதனும் பிறந்தது முதல் அடுத்தடுத்த கட்ட முன்னேற்றம் பெற கல்வி, தொழில், திருமணம், வீடு ஆகிய நான்கும் அவசியமாகும். இந்த நான்கு விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர் செவ்வாய் பகவான். இந்த நான்கையும் நாம் வெற்றிகரமாக கையாள்வதற்கு செவ்வாய் பகவான் வழிபாடு செய்வது உத்தமம். ஒரு மனிதனுக்கு படிப்பு இருந்தால் தான் அவன் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அடைய முடியும். கல்வி அறிவு தான் தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும். எனவே அந்த கல்வியை அருளக் கூடிய செவ்வாய் பகவானை செவ்வாய்க் கிழமையில் வாரம் தோறும் வழிபட வேண்டும்.

- Advertisement -

தொழிலில் முன்னேற்றம் பெறவும், செவ்வாய் பகவானுடைய அனுகிரகம் தேவை. அதன் பிறகு திருமணம் என்பது முக்கியமான காலகட்டம். செவ்வாய் பகவானால் தடைபடும் திருமண யோகம் நம் முன்னேற்றத்தையும் தடை செய்கிறது. எனவே திருமணத்தை தடை இல்லாமல் நடத்த செவ்வாய் பகவான் அருள் தேவை. திருமணம் முடிந்த பின்பு எல்லோருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கும்.

sevvai

பூமித்தாயின் மகனாக பிறந்த செவ்வாய் பகவான் அருள் இருந்தால் தான் நம்மால் ஒரு பூமியை முழுமையை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். எனவே செவ்வாய் தோறும், செவ்வாய் கிழமையில், செவ்வாய் ஓரையில், செவ்வாய் பகவானை, செவ்வாய் காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட்டு வர வேண்டும்.

- Advertisement -

செவ்வாய் காயத்ரி மந்திரம்:
ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்!!!

அதே போல சிவப்பு நிறத்தில் இருக்கும் மைசூர் பருப்பு எனப்படும் துவரம் பருப்பு செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்கு உரியது எனவே செவ்வாய் பகவானின் அருள் பெற செவ்வாய்க் கிழமையில் முருகன் கோவிலில் அல்லது நவகிரக சந்நிதியில் வைத்து மைசூர் பருப்பை மற்றவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். செவ்வாய் பகவானுக்கு முருகக்கடவுள் அதிபதியாக இருப்பதால் முருகனை வழிபடுவதன் மூலமும் நாம் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆறுமுகனின் அருள் பெற 6 பேருக்கு இந்த மைசூர் துவரம் பருப்பை தானம் கொடுக்கலாம். கல்வி, தொழில், திருமணம், சொந்த வீடு ஆகிய இந்த நான்கு கனவுகளையும் நிறைவேற்றிக் கொள்ள இந்த எளிய பரிகாரத்தை அனைவரும் செய்து பயன் அடையலாமே!

சற்று முன்