தப்பித்தவறி கூட, இந்த புது வருட பிறப்பிற்கு சாமிகிட்ட இப்படி மட்டும் வேண்டுதலை வைக்காதீங்க. இதனாலதாங்க கஷ்டம் நம்மை விட்டு போகவே மாட்டேங்குது.

pray
- Advertisement -

வருடத்திற்கு ஒருமுறை புத்தாண்டு வந்து கொண்டே தான் இருக்கின்றது. நாமும் இறைவனிடம் வேண்டி, வரத்தைப் பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றோம். வருடா வருடம் புத்தாண்டு நம்மை கடந்து செல்கின்றது. நாட்கள் மாதங்கள் உருண்டோடுகிறது. நம்முடைய வயதும் கடந்து போகின்றது. ஆனால், நம்மிடம் இருக்கும் கஷ்டத்திற்கு மட்டும் வயது ஆக மாட்டேங்குதே! கஷ்டம் நம்மை கடந்து செல்ல மாட்டேங்குதே! அது மட்டும் ஏன்னு நீங்க யோசிச்சு இருக்கீங்களா? நாம் இறைவனிடம் கேட்கும் வரத்தில் தான் தவறு இருக்கின்றது. அது என்ன தவறாக இருக்கும்! நீங்க தெரிஞ்சுக்க ஆசைப்பட்டா இந்த பதிவை முழுசா படிச்சு தெரிஞ்சுக்கோங்க.

praying-god1

இறைவன் ரொம்ப ரொம்ப நல்லவர். நாம் கேட்கின்ற வரத்தை வாரி வழங்குபவர். அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. நம்மில் பல பேருக்கு இது புரிந்திருக்கிறது. அதனால்தான் அழுது புலம்பி, பூஜை செய்து, ஒற்றைக்காலில் நின்று, வேண்டி மன்றாடி இறைவனிடம் நமக்கு தேவையான வரத்தை கேட்டுப் பெற்று விடுகின்றோம்.

- Advertisement -

நீங்கள் உங்களுக்காக இறைவனிடம் கேட்கும் வரம், உங்களுக்கு நன்மையை மட்டும் தான் தரும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? இன்றைக்கு உங்களுக்கு நல்லது என்று நினைத்து நீங்கள் இறைவனிடம் கேட்கக்கூடிய வரமே, நாளைக்கு உங்களுக்கு சாபமாக மாறும். ஆனால் இது பல பேருக்குப் புரிவதில்லை. ஆனால் வரத்தை தரும் இறைவனுக்கு நன்றாகவே புரியும்.

அதனால்தான் நமக்கு கெடுதல் தரும் வரத்தை, அந்த இறைவன் நமக்கு கொடுக்காமல் இருக்கின்றார். நாம் கேட்கும் வரத்தின் மூலம், நமக்கு கெடுதல் தான் வரப்போகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளாமலேயே அடம்பிடித்து, நமக்கு வாழ்க்கையில் எது கிடைக்காமல் இருக்கின்றதோ, அதை கேட்டு வரமாக இறைவனிடம் பெற்று, எதிர்காலத்தில் அந்த வரம் சாபமாக மாறி கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

- Advertisement -

புரிந்ததா? பெரிய பெரிய ஞானிகளும் முனிவர்களும் இறைவனை காண தவம் இருப்பார்களாம். தவத்தில் மனம் குளிர்ந்த இறைவன், நேரில் வந்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், அந்த சமயத்தில் ‘தனக்கு எது சரியான வரம், என்ன கேட்க வேண்டும் என்று தெரியாமல் வரத்தை தவறாக கேட்டு பல பிரச்சனைகளில் மாட்டிக்கொண்ட’ பல ரிஷிகளின் கதைகளையும் இதிகாசம் நமக்கு சொல்லி தான் உள்ளது.

praying-god-9

இருப்பினும் இறைவனிடம் நாம் எதை கேட்கின்றோம்? ‘எனக்கு இது வேண்டும். அது வேண்டும். இவ்வளவு சம்பாதிக்க வேண்டும். அவ்வளவு சம்பாதிக்கவேண்டும். கோடி ரூபாய் கிடைக்க வேண்டும். தங்க நகை வேண்டும். என்ற வரத்தை தான் இன்றளவும் நான் இறைவனிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.’ பொன் பொருள் காசு புகழ் இவை எல்லாம் நம்மிடம் தேவைக்கு அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிம்மதி என்ற சொத்து நிரந்தரமாக இருக்கின்றது.

- Advertisement -

இறைவனுக்குத் தெரியும். இந்த பொன் பொருள் காசு புகழ் இவைகளை அதிகமாக கொடுத்தால், உன்னிடம் இருக்கும் நிம்மதி காணாமல் போகும் என்று! இதனாலேயோ என்னமோ தெரியவில்லை, எல்லாவற்றையும் நமக்கு ஆண்டவன் அளவோடுதான் தந்திருக்கின்றான்.

சரி, இறைவனிடம் நாளை புத்தாண்டு அன்று, நீங்கள் என்ன வரத்தினை கேட்க வேண்டும்? ‘இறைவா எனக்கு வாழ்நாள் முழுவதும் எது நன்மையை கொடுக்குமோ, அதை மட்டும் நீ எனக்கு தந்தால் போதும். என்னுடைய வாழ்க்கையில் நான் தவறான பாதைக்கு செல்லும் போது என்னை தடுத்து நிறுத்த வேண்டும். என்னுடைய வாழ்க்கைக்கு எது சரி இல்லையோ, அதை நீ எனக்கு கொடுக்கவே வேண்டாம். என்னைவிட என்னை படைத்த உனக்குத்தான் எல்லாம் தெரியும்.’ உலகத்திலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலை இறைவனிடம் வைத்தாலே போதும். அந்த ஆண்டவன் வரங்களை அள்ளி அள்ளி வழங்கி நமக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான் என்ற கருத்தினை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
புத்தாண்டு அன்று காலையில் இப்படி பூஜை செய்தால், வருடம் முழுவதும் உங்கள் வீட்டில் கஷ்டமும், வறுமையும் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -