நாளைய தினம் 29-4-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரவிருக்கும் சித்திரை கிருத்திகை. இந்த நாளில் நாம் முருகர் வழிபாட்டை மேற்கொண்டால் நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலகும். நரகமாக இருப்பவர்களுடைய வாழ்க்கையும் சொர்க்கமாக மாறும் என்பது நம்பிக்கை. மாதம் தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். இருந்தாலும் சித்திரை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் தான் முருகனது திருஉருவம், உருவானதாக நம்முடைய புராணங்கள் சொல்கிறது.
இந்த நாளில் முருகனை வழிபாடு செய்பவர்களுக்கு கிரக தோஷங்கள் நீங்கும். குடும்ப கஷ்டங்கள் தீரும். அதிலும் இந்த வருடம் வந்திருக்கும் சித்திரை மாத கிருத்திகை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் நிவர்த்தி செய்ய இந்த நாளில் முருகன் வழிபாட்டை கட்டாயம் செய்ய வேண்டும்.
ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் எல்லாம் மனிதர்களுக்கு தான். அந்த முருகன் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரனாக மாற்ற முடியும். எல்லாம் அவனுடைய விளையாட்டு. உங்களுக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் சித்திரை கிருத்திகை அன்று, முருகனை பின் சொல்லக்கூடிய முறையில் வழிபாடு செய்து பாருங்கள். நிச்சயமாக கிரக தோஷங்கள் எல்லாம் விலகி, சீக்கிரமே சொந்த வீடு வாங்கக் கூடிய யோகம் உங்களை தேடி வரும். பணம் காசு இல்லை என்னுடைய ஜாதக கட்டத்தில் சொந்த வீட்டுக்கு வாய்ப்பு இல்லை. இது எல்லாம் முருகனிடம் தோற்றுப் போகும். இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால் உங்களுக்கு சொந்த வீடு நிச்சயம் கிடைக்கும்.
சொந்த வீடு வாங்க பரிகாரம்
நாளை செவ்வாய்க்கிழமையோடு இந்த சித்திரை திருத்திகை வந்திருக்கிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்று முருகனை மனமுருக வேண்டுங்கள். 6 செம்பருத்தி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். ஆறு செம்பருத்தி இலையையும், ஒரு தாம்பூல தட்டில் அழகாக வட்ட வடிவில் அடுக்கி வைத்துவிட்டு, அந்த இலைகளுக்கு மேலே 1 ஸ்பூன் துவரம் பருப்பை வைத்து, பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.
தாம்பூல தட்டில் வட்ட வடிவில் அடுக்கிய இந்த இலைகளுக்கு நடுவே, ஒரே ஒரு மண் அகல் விளக்கை வைத்து, நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு முருகனை நினைத்து விளக்கு ஏற்ற வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதலை முருகப்பெருமானிடம் வைக்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என்று உங்களுக்கு தேவையான வேண்டுதலை வைக்கலாம். அல்லது நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தால் அது சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளலாம்.
முருகப்பெருமானுக்கு இரண்டு செம்பருத்தி பூக்களை வாங்கி வையுங்கள். அது மிக விசேஷமான பலனை கொடுக்கும். ஏனென்றால் சிவப்பு என்பது செவ்வாய். சிவப்பு நிற செம்பருத்திப்பூ முருகனுக்கு உகந்தது. செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் இந்த கிருத்திகை நாளில் முருகனுக்கு இரண்டு செம்பருத்தி பூ வைத்தால் அவ்வளவு நன்மை நடக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு முருகனுக்கு உகந்த சொந்த வீடு கட்ட திருப்புகழ் ஒன்று இருக்கிறது அந்த பாடலை படிக்க வேண்டும்.
சொந்த வீடு தரும் திருப்புகழ்.
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
அருணகிரி நாதர் அவர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சிறுவாபுரி முருகன் அருளைப் பெற்ற திருப்புகழ் பாடல் வரிகளை, செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் கிருத்திகை தினத்தில் தவறாமல் படிக்கவும். வழக்கம்போல ஒரு நெய்வேதிய முருகனுக்கு வைத்து தீப தூப கற்பூரம் ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அந்த தட்டில் வைத்திருக்கும் துவரம் பருப்பை என்ன செய்வது. அந்த துவரம் பருப்பு எல்லாம் சேகரித்து காக்கை குருவிகளுக்கு இரையாக போட்டு விடுங்கள். அந்த செம்பருத்தி இலை வாடியவுடன் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம்.
இந்த செம்பருத்திப் பூ இலையை உற்று நோக்கும்போது அதில் வேல் போன்ற உருவம் நமக்கு தெரியும். இந்த இலையை முருகனுக்கு சமர்ப்பணம் செய்து வேண்டுதல் வைத்தால், நம்முடைய வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும் என்பதும் ஒரு நம்பிக்கைதான். வெற்றிலை வழிபாட்டிற்கு நிகரான பலனை தரும் இந்த செம்பருத்தி பூ இலை பரிகாரத்தை இந்த செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் கிருத்திகை நாளில் செய்து பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: வாரம் முழுவதும் வெற்றி தரும் கயிறு பரிகாரம்
பணம் காசு என்னிடம் இல்லை என்று சொன்னால் கூட உங்களுடைய வறுமை நீங்கி, செல்வ செழிப்பு உயர்ந்து தானாக வீடு கட்டும் யோகம் அடுத்த வருடம் வரும் சித்திரை கிருத்திகைக்குள் நிச்சயம் கிடைக்கும் என்பதுதான் வழிபாட்டில் இருக்கும் நம்பிக்கை. முழு நம்பிக்கையோடு செய்யுங்கள். முருகன் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.