செவ்வாய்க்கிழமை என்றாலே நம் நினைவுக்கு வருவது முருகர். நிலத்துக்கு சொந்தக்காரரான அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. அங்காரகனை செவ்வாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய் என்றாலே அதற்கு அதிபதி முருகர் தான். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் முருகர் வழிபாடு செய்தால், நாம் சொந்த வீடு வாங்கிவிடலாம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்த வழிபாட்டுடன் சேர்த்து பின் சொல்லக்கூடிய இந்த தாந்திரீக முறையையும் பின்பற்றி பாருங்கள். நிலம் வாங்க, வீடு வாங்க உங்களை அறியாமல் ஏதோ ஒரு தடை, உங்களை பின்தொடர்ந்து வருகிறது என்றால், அந்தத் தடையை உடைக்க இந்த தேங்காய் பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
எப்படி? இந்த தேங்காயை உடைத்தால் உங்கள் தடை உடையும். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் சொந்த வீடு அல்லது நிலம் வாங்கி உங்களுக்கான சொத்தை சேர்த்துக் கொள்வீர்கள். சரி, வாங்க அந்த பரிகாரம் என்ன என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சொந்த வீடு வாங்க தேங்காய் பரிகாரம்
சொந்த வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்று மனதில் ஆசை தோன்றி விட்டது. அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்கிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறீர்கள். ஆனால் சொந்த வீடு நிலமும் வாங்க முடியவில்லை. உடனடியாக ஒரு செவ்வாய்க்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.
முந்தைய நாளே நல்லதாக ஒரு தேங்காய் வாங்கிக் கொள்ளுங்கள். அதாவது திங்கட்கிழமையே தேங்காய் வாங்கி வந்து வீட்டில் வைத்துக்கொண்டு, செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
முதலில் குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். பரிகாரம் செய்தில் தடை வரக்கூடாது என்று பிள்ளையாரை வேண்டிக் கொண்டு, முருகரை வேண்டிக்கொண்டு, உள்ளங்கைகளில் தேங்காயை வைத்துக் கொள்ளுங்கள். கடவுளே எப்படியாவது சொந்த வீடு நிலம் எனக்கு கிடைக்க வேண்டும். அந்த பாக்கியத்தை நீதான் கொடுக்க வேண்டும் என்று வாய்விட்டு சொல்லியும் பிரார்த்தனை செய்யலாம். மனம் உருகி சொல்லியும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம். உங்கள் விருப்பம் தான். கையில் தேங்காய் அப்படியே இருக்கட்டும்.
“ஓம் நில வசிய ஸ்வாஹா, ஓம் வீடு வசிய ஸ்வாஹா!” இந்த இரண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும். இரண்டு மந்திரத்தையும் சொல்லலாம் தவறு கிடையாது. சில பேருக்கு நிலம் மட்டும் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சில பேருக்கு வாங்கிய நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். உங்களுக்கு நிலம் வாங்க வேண்டும் என்றால் “ஓம் நிலம் வசிய ஸ்வாஹா” மந்திரத்தை சொல்லுங்கள்.
வாங்கிய நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால் “ஓம் வீடு வசிய ஸ்வாஹா” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். கையில் தேங்காயை வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி பிறகு தேங்காயை இரண்டாக உடைத்து விட வேண்டும். தேங்காய் தண்ணீர் கீழே போகட்டும். மீதம் இருக்கும் தேங்காயை சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து வாயில்லா ஜீவன்களுக்கு வைத்து விட வேண்டும். இதை நீங்கள் பயன்படுத்தக் கூடாது. இவ்வளவுதான் பரிகாரம். மூன்று செவ்வாய்க்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்துதான் பாருங்கள்.
இதையும் படிக்கலாமே: முன்னேற்றம் தரும் சதுர்த்தி திதி வழிபாடு
முயற்சிகள் எப்படி படி வேகமாக வேலை செய்கிறது என்று உங்களுக்கே தெரியும். வீடு நிலம் வாங்க வேண்டிய யோகம் உங்களுக்கு வந்து விடும். உங்களுடைய கனவு நிச்சயம் நினைவாகும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிய பரிகாரம் பெரிய அளவில் மாற்றங்களை தரும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.