- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுன்னேற்றம் தரும் சதுர்த்தி திதி வழிபாடு

முன்னேற்றம் தரும் சதுர்த்தி திதி வழிபாடு

- Advertisement -

நிறைய பேருக்கு வாழ்க்கையில் வளர்ச்சி, முன்னேற்றம் என்பதே இருக்காது. வாழ்க்கையை தொடங்கிய இடத்தில் இருந்தே, தங்களுடைய வாழ்க்கையை கழித்து விடுவார்கள். வாழ்க்கையை தொடங்கிய இடத்திலிருந்து வாழ்க்கை முடிந்தும் போகும். இப்படி எல்லாம் என்னுடைய வாழ்க்கை இருக்கக் கூடாது, சீக்கிரம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உங்களுடைய மனதிற்குள் இருந்தால்.

இன்றைய தினம் மாலை 6:30 மணிக்கு மேல் பிள்ளையார் கோவிலுக்கு போய் அந்த கணேசனை, பின் சொல்லக் கூடிய முறையில் கும்பிடுங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியானது, அந்த வளர்பிறை நிலவு போல வளர்ந்து கொண்டே செல்லும். வாழ்க்கையில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை என்பவர்கள், இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

விநாயகர் வழிபாடு

வளர்பிறை சதுர்த்தி திதி. மாலை 6:30 மணிக்கு மேல் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான பலனை கொடுக்கும். இப்படி விநாயகரை பார்க்க கோவிலுக்கு செல்லும்போது, அருகம்புல், தேங்காய், பூ, பழம், வெற்றிலை பாக்கு, இவைகளை வாங்கி செல்லுங்கள். முடிந்தால் விநாயகருக்கு ஒரு இனிப்பு பலகாரம் வாங்கிக் கொள்ளுங்கள். 3 லட்டு எடுத்துச் சென்றாலும் போதும். விநாயகருக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

அர்ச்சனை செய்த தேங்காய் திரும்பவும் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். விநாயகருக்கு உடைத்து அர்ச்சனை செய்த இரண்டு தேங்காய் மூடிகள் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா. அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, ஒரு பஞ்சதிரி போட்டு, கோவிலிலேயே விளக்கு ஏற்றி விட வேண்டும். ஒரு வாழை இலையிலோ, பாக்கு மட்டை தட்டிலோ, கொஞ்சம் பச்சரிசி பரப்பி, அதன் மேலே இந்த தேங்காயை நிற்க வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி விளக்கு போட்டு விநாயகரிடம் என்ன வேண்டினாலும் அது அப்படியே கிடைக்கும்.

- Advertisement -

சாதாரண திங்கட்கிழமையில் இந்த வேண்டுதலை செய்தாலே உங்களுக்கு கோடி பலன். திங்கட்கிழமையோடு சேர்த்து வந்திருக்கும் இந்த சதுர்த்தி திதியில் இந்த வழிபாடு செய்வதற்கு, ஒரு பெரிய பாக்கியம் தேவை. உங்கள் வாழ்க்கையில் கஷ்ட காலங்கள் இன்றோடு முடிந்துவிட்டது. இனி வரக்கூடிய நாட்களில் முன்னேற்றம் மட்டும் தான் இருக்கிறது என்றால், நிச்சயம் இந்த விளக்கை போடக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் வெற்றியடைய சக்கரத்தாழ்வார் வழிபாடு

உங்கள் தலைவிதியில் ஏதோ ஒரு மாற்றம் நிகழப் போகிறது. அதற்காகத்தான் பிள்ளையார் இப்படி ஒரு பரிகாரத்தை உங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்று நினைத்து, இந்த பரிகாரத்தை இன்று மாலை பிள்ளையார் கோவிலில் போய் செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படும். முன்னேற்றம் ஏற்படும். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்