வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்து தங்களுக்கு சொந்தமாக ஒரு வீட்டையோ அல்லது நிலத்தையோ வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதை நினைவாக்குவதற்காக பலவிதமான முயற்சிகளை செய்தும் ஏதோ ஒரு ரூபத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும், நிலம் வாங்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசைப்படுபவர்களும் செய்ய வேண்டிய ஒரு மண்பானை பூஜை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சொந்தமாக வீடு வாங்க பூஜை
பலரும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றால் நிலத்திற்குரிய கிரகமாக திகழக்கூடிய நவகிரகங்களில் ஒருவராக இருக்கும் செவ்வாய் பகவானையும், செவ்வாய் பகவானுக்குரிய அதி தேவதையாக திகழக்கூடிய முருகப்பெருமானையும் வழிபாடு செய்வார்கள். இவர்களை வழிபாடு செய்வதோடு பூமி தேவியையும் நாம் வழிபாடு செய்யும்பொழுது தான் பூமி தேவியின் அருளால் நமக்கு சொந்தமாக வீடோ, நிலமோ அமையும் அப்படி செய்ய வேண்டிய பூமி தேவி வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக வாங்கிய ஒரு மண் பானை வேண்டும். இந்த மண்பானையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். சிறிய அளவில் இருந்தால் கூட போதும். இந்த மண்பானையை சுற்றி மஞ்சளை தடவி அதற்கு குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நாம் குடியிருக்க கூடிய வீட்டின் முன் பக்கத்தில் இருக்கக்கூடிய மண்ணை எடுத்து அந்த மண்பானையில் கழுத்து வரை போட வேண்டும். பிறகு இந்த மண்பானையை மூடுவதற்காக ஒரு வெள்ளை நிற துணியை எடுத்து அதில் மஞ்சள் மற்றும் பன்னீரை தடவி நிழலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து அன்றைய நாளில் வரக்கூடிய நல்ல நேரத்தில் வீட்டு பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பித்தளை தட்டிற்கு மேல் பச்சரிசியை கொட்டி அந்த பச்சரிசிக்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த மண்பானையை வைக்க வேண்டும். பிறகு அதில் 101 என்ற எண்ணிக்கையில் ஒரு ரூபாய் நாணயங்களை போட வேண்டும். இப்பொழுது இந்த பானையை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மஞ்சள் துணியால் நன்றாக கட்டிவிட வேண்டும். இவ்வாறு கட்டிய பிறகு அந்த மஞ்சள் துணிக்கு மேல் 3 சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ரோஜா மலர்களை வைத்து “ஓம் நமோ பூமியை நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 48 நாட்கள் தினமும் மூன்று ரோஜா பூக்களை வைத்து இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்வதன் மூலம் பூமி தேவியின் அருளால் விரைவிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். சொந்த வீடு வாங்கிய பிறகு நாம் வாங்கிய அந்த சொந்த வீட்டின் வாசலில் மண்பானையில் இருக்கக்கூடிய மண்ணை போட்டு விட வேண்டும். நூற்று ஒரு ரூபாயை பெருமாள் கோவில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: காரிய தடையை நீக்கும் தேய்க்கிறை சஷ்டி வழிபாடு
சொந்தமாக வீடு நிலம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த மண்பானை பூஜையை முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்ய விரைவிலேயே அவர்களின் கனவு நினைவாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.