டிசம்பர் 4 2021, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழவிருக்கிறது! இதனால் சுப மற்றும் அசுப பலன்களை பெற போகும் ராசிக்காரர்கள் யாரெல்லாம்? 12 – ராசிக்காரர்களுக்கான துல்லிய கணிப்பு.

astro-grahanam
- Advertisement -

டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே பலருக்கும் ஏதோ ஒரு பதட்டம் மக்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. உலக முக்கிய நிகழ்வுகள் பலவும் சமீபத்திய காலத்தில் டிசம்பர் மாதத்தில் தான் அதிகம் பாதித்துள்ளன என்பதால் இந்த பதட்டம் ஏற்படுகிறதோ, என்னவோ! இன்னும் 10 நாட்களில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அமாவாசை தினத்தில், கிருஷ்ண பட்சத்தில் காலை 10:59 மணியிலிருந்து, மதியம் 03.07 மணி வரை நிகழ இருக்கிறது. இதனால் சாதக, பாதக பலன்களை பெற இருக்கும் 12 ராசிக்காரர்களுக்கான துல்லிய கணிப்புகளை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சில அசுபமான பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை வெளியிட பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடிக்கடி வெளியில் செல்பவர்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். உணவு கட்டுபாட்டில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் கூடுமானவரை எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. கிரகணத்தின் பொழுது வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். குடும்பத்தில் குழப்பங்கள் இருந்தால் அதனை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சுப பலன்களே ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்துவதால், இதுவரை உங்களுக்கு இருந்து வந்த ஆரோக்கிய பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். மேலும் எதிர்பாராத திடீர் பண வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

- Advertisement -

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சுப பலன்களைக் கொடுக்க இருக்கிறது. கிரகணம் நிகழும் பொழுது தேவையற்ற பேச்சு வார்த்தைகளை குடும்பத்தில் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல், வெளி இடங்களிலும் நீங்கள் இன்முகத்துடன் பேசுவது சுப பலன்களை கொடுக்கும். முன்கோபம் இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. பிள்ளைகளின் மீது அக்கறை செலுத்துங்கள்.

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணத்தால் சுப பலன்கள் ஏற்படும். பெரிதாக அசுப பலன்கள் எதுவும் ஏற்படாது என்பதால் உங்கள் அன்றாட பணிகளை சிறப்பாக செய்யலாம். எனினும் தேவையற்ற வம்பு, வழக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.

- Advertisement -

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் மூலம் எந்த விதமான தீங்கும் ஏற்பட போவதில்லை. எனினும் தேவையில்லாமல் குடும்பத்தில் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. நீ பெரிதா? நான் பெரிதா? என்கிற போட்டி, பொறாமைகளை நீக்கி, விட்டுகொடுத்து செல்வது நல்லது. பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:
துலாமில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கப் போகிறது. சாதகமற்ற அமைப்பாக இருப்பதால் தேவையில்லாமல் கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நல்லதை செய்ய போனாலும், அது கெட்டதாக முடியும். கிரஹண சமயத்தில் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கப் போகிறது. உங்கள் ராசிக்கு சீரற்ற அமைப்பு என்பதால் மனதில் ஒரு விதமான பதற்றம் நிலவும். வெளி இடங்களில் அதிகம் பொறுமையாக இருப்பது நல்லது. குறிப்பாக பணி செய்யும் இடங்களில் நிதானம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை பிரயோகிக்காமல் இருப்பது உத்தமம். குழப்பத்தில் இருந்து விடுபட தியானம் மேற்கொள்ளுங்கள்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் தேவையற்ற வீண் விரயங்களை ஏற்படுத்தி விடும் என்பதால் கிடைக்கின்ற பணத்தை சுப விரயம் ஆக்கிக் கொள்வது, சமயோசிதமாக செயல்படுவது உத்தமம். தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கிரஹண நிகழ்வின் பொழுது ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து கொள்வது உத்தமம். உங்கள் விடா முயற்சிக்கு உரிய பலன்கள் கிடைக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அதிகம் பொறுமையை கொடுக்கும். உங்கள் ராசிக்கு சுப பலன்களை கொடுப்பதால் குடும்பத்தில் திடீர் வரவு ஒன்று நிகழும். தேவையற்ற அலைச்சல் மற்றும் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் பெரிதாக அசுப பலன்களை ஒன்றும் கொடுக்கப் போவது இல்லை. கிரகணத்தின் பொழுது வெளியிட பயணங்களை தவிர்க்கவும். மேலும் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். போஷாக்கு நிறைந்த உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகணம் அசுப பலன்களை கொடுக்கப் போவது இல்லை. எந்த ஒரு விஷயத்தையும் கடினமாக உழைத்தால் தான் உங்களுக்கு அதற்குரிய முழுபலனும் கிடைக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுவது நல்லது. காரண காரியம் இன்றி எதுவும் நடக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -