சூரியப் புயல் இன்று பூமியை தாக்க உள்ளது. இதனால் என்ன நடக்கும் ?

சூரியப் புயல் ஒன்று இன்றைய தினம் பூமியைத் தாக்கப் போவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார். சூரியப் புயல்கள் பூமியைத் தாக்குவது புதிதல்ல. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இன்று (மே 6) நிகழவுள்ளதாக தேசிய கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான (என்ஓஏஏ) தெரிவித்துள்ளது.

Suriya puyal

இச்சூரியப் புயல் பூமியைத் தாக்கும் போது விண்வெளியின் காஸ்மிக் துகள்களும் அதனுடன் இணைந்து பூமியை நோக்கி வரும். இன்றைய தினம் பூமியைத் தாக்கவுள்ள புயல் வலு குறைந்தது என்றாலும் அதனால் சில பாதிப்புகள் நிகழ தான் செய்யும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இச்ச்சூரியபுயலால் விண்வெளியிலுள்ள செயற்கைக்கோள்களின் செயல்பாடுகள் சிறிது பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் தகவல் தொடர்புச் சேவைகளில் பாதிப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி புவிவட்டப்பாதையில் சுற்றிவரும் செயற்கைகோள்கள் இந்த சூரியப்புயலை நேரிடையாக எதிர்கொள்வதால் ஜிபிஎஸ், கைப்பேசி சமிக்ஞய்களில்(சிக்னல்)பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்: