- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெய்தொழில் உயர சூரிய வழிபாடு

செய்தொழில் உயர சூரிய வழிபாடு

- Advertisement -

தொழில், வியாபாரம், உத்தியோகம் என்று எந்தவிதமான இடத்தில் நீங்கள் இருந்தாலும், உங்களுடைய செய்யும் தொழிலில் உயர்ந்து சிறப்பாக வளர, சூரிய பகவானுடைய அருள் கண்டிப்பாக தேவை. ராஜ கிரகம் என்று அழைக்கப்படும் இந்த சூரியனுடைய அருள் இருந்தால் குப்பையில் இருப்பவரும் கோபுரத்தில் ஏறலாம்! ஞாயிற்றுக்கிழமையில் சூரிய பகவான் வழிபாடு எப்படி செய்ய, செய்தொழிலில் உயரலாம்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கிரகங்களில் ராஜ கிரகமாக இருக்கக் கூடிய சூரிய பகவானுக்கு தனி கோவில்கள் நம்மை சுற்றிலும் இருக்கும். அந்த கோவிலுக்கு சென்று ஞாயிற்றுக் கிழமையில் தவறாமல் விளக்கு போட்டு வாருங்கள். சூரியனாருக்கு விளக்கு போட்டு வந்தால், நம் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, நம் வாழ்வில் இருக்கக்கூடிய இருள் நீங்கி, சூரியன் பிரகாசமாக ஒளி வீசுவது போல ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

- Advertisement -

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்களும், சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் தொடர்ந்து விளக்கு போட்டு வரலாம். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் வளர்ச்சி காண, முன்னேற்றம் அடைய நமக்கு சூரிய அருள் வேண்டும். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல நம்முடைய தொழில் ஒரே இடத்தில் முடங்கி கிடக்காமல் மென்மேலும் வளர்ச்சி அடைய, உத்தியோக ரீதியாக பதவி உயர்வுகள் பெற, வியாபாரம் செழிப்பாக இருக்க சூரியனுக்கு கோதுமையால் செய்த நைவேத்தியங்களை படைத்து வழிபட்டு அதை அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் செய்ய வேண்டும்.

சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை! கோதுமையை எந்த அளவிற்கு நீங்கள் தானம் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு சூரிய அருள் உங்களுக்கு கிடைக்கும். தினமும் காலையில் சூரியன் உதிக்கும் பொழுது எழுந்து குளித்து முடித்து, சுத்த பத்தமாக சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஒரு செம்பில் தண்ணீரை நிரப்பி அதில் கொஞ்சம் கோதுமையை சேர்த்து கலந்து வையுங்கள். இடது கையில் செம்பை வைத்துக் கொண்டு சூரியனை பார்த்து வணங்கி விட்டு, பூமியை நோக்கி வலது கையில் தண்ணீரை வார்த்து கீழே விட வேண்டும். இப்படி நீர் விடும் பொழுது “ஓம் சூரிய தேவாய நமஹ…” என்னும் இந்த மந்திரத்தை மூன்று முறை ஜெபிக்க வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரியனார் கோவிலுக்கு சென்று செவ்வரளி மலர்களால் அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். செவ்வரளி மலர்களை சாற்றி மனதார செய்தொழில் உயர பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் வேண்டியது வேண்டியபடி நடக்கும். தோஷங்கள் நீங்கி, குடும்பம் செழிப்பாக இருக்க, பொருளாதார ரீதியாக உயர்ந்து முன்னேற்றம் அடைய, சிவப்பு வஸ்திரம் சாற்றுங்கள். பின் சூரியனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, கோதுமையால் செய்த நைவேத்திய பிரசாதங்களை தானம் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பௌர்ணமி மஹாலக்ஷ்மி மந்திரம்

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சூரிய நமஸ்காரம் செய்த பின்பு கோதுமையால் செய்த உணவு பண்டங்களை குழந்தைகளுக்கு தானம் கொடுக்கலாம். முழு தானிய கோதுமையையும் இயலாதவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் தானம் கொடுங்கள். மொட்டை மாடியில் அல்லது வெட்ட வெளியில் கொஞ்சம் கோதுமையையும், தண்ணீரையும் வைத்து பறவைகளுக்கு உணவளியுங்கள். இப்படி செய்து வருவதன் மூலம் விரைவிலேயே செய்தொழிலில் உயரலாம்.

சற்று முன்