ரிஷபத்தில் இருந்து பெயர்ச்சியாகும் சூரிய பகவான் – இன்னும் சில நாட்களில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்லதொரு யோகம் தான்.

suriyan
- Advertisement -

சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் ஆகிறார். அந்த வகையில் ஜூன் மாதம் 15 ஆம் தேதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சியாக விருக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சி காலம் என்பது இந்த குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் யோகமான காலமாக இருக்கும் என ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நான்கு அதிர்ஷ்ட ராசியினர் யார்? அவர்களுக்கான பலன்கள் என்ன? என்பது குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சி என்பது அவர்களின் மனதில் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் அதிகரிக்கச் செய்யும். தந்தை வழியிலான பூர்விக சொத்துக்கள் சிலருக்கு கிடைக்கக்கூடும். தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். உத்தியோகங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லக்கூடிய யோகம் ஏற்படும். திருமணமாகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு ஆண் குழந்தை வாரிசு உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது மனோதிடத்தையும், தைரியத்தையும் கொடுக்கும். மக்கள் செல்வாக்கு உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். அரசாங்க பணிகளில் இருப்பவர்களுக்கு மிக உயரிய பதவிகள் கிடைக்கக்கூடும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். வாழ்க்கை துணை வழியில் சொத்து சேர்க்கை ஏற்படும். சிலருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலையை அடைவார்கள். தொலைதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும்.

கன்னி
புதனின் சொந்த வீடான கன்னி ராசியினருக்கு புதனின் மற்றொரு வீடான மிதுனத்தில் சூரியன் பெயர்ச்சியாகிறார். கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியனால் தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சிறந்த முன்னேற்றங்களை தரும் என்றாலும் தொழில் ரீதியான புதிய முதலீடுகள் தொடர்பான விடயங்களில் நன்கு ஆலோசித்து ஈடுபட வேண்டும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்புகளால் பொருளாதார ரீதியான லாபங்கள் உண்டாகும். உத்தியோகங்களில் இருப்பவர்கள் தங்களின் சொந்த திறமையால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெறக்கூடும். சிலருக்கு புதிய வீடு, மனை போன்ற அசையா சொத்து சேர்க்கை ஏற்படும்.

கும்பம்
கும்ப ராசிக்கு ஐந்தாம் வீடாகிய மிதுன ராசியில் சூரியன் பெயர்ச்சியாகயுள்ளதால் உடல் நலம் மேம்படும். திருமணமாகி குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதிகளுக்கு அழகும், அறிவும் மிகுந்த குழந்தை பிறக்கும். எதிர்பாராத வழிகளில் தனவரவு ஏற்படும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, கலைகளில் நல்ல நிலையை அடைவார்கள். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புது வாடிக்கையாளர்கள், புது ஒப்பந்தங்கள் கிடைத்து நல்ல லாபம் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்க கூடிய யோகமும் ஏற்படும்.

- Advertisement -