சொரசொரன்னு இருக்கிற மூக்கும், கன்னமும் 10 நிமிடத்தில் செலவே இல்லாமல் பளிச்சுன்னு பளிங்கு போல ஜொலிக்க வீட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

urad-dal-rough-skin
- Advertisement -

மொபைல் ஃபோனில் சிலருடைய முகம் பியூட்டி மோட்-இல் வைத்தால் தான் பார்ப்பதற்கே ஷைனிங்காக இருக்கும் ஆனால் உண்மையில் அப்படி இருக்க பத்து பைசா செலவில்லாமல் வீட்டில் இருக்கும் இந்த ரெண்டு பொருட்களை வைத்து சொரசொரன்னு இருக்கிற மூக்கு, கண்ணம், தாடை, நெற்றி போன்ற எல்லா இடங்களிலும் பளிங்கு போல பளபளன்னு மின்ன செய்ய எந்த 2 பொருட்களை பயன்படுத்த வேண்டும் தெரியுமா? உங்க சமையல் கட்டில் இந்த பொருட்கள் இருக்கான்னு பாருங்க! பத்து நிமிடத்தில் நீங்களும் உங்க முகத்தை தொட்டு தொட்டு பார்க்க விரும்புவீங்க! மிருதுவான சருமத்திற்கு எளிதான வீட்டு அழகு குறிப்பு என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சிலருடைய கண்ணங்களில், நெற்றி பகுதிகளில் எல்லாம் சொரசொரன்னு புள்ளிகள் இருக்கும். அதை காட்டிலும் சிலருக்கு எல்லா இடங்களும் நன்றாக இருந்தாலும் மூக்கு பகுதி மட்டும் சொரசொரன்னு இருக்கும். இது ஒட்டுமொத்த அழகையே சீர்கெடுத்து விடும் என்பதால் இதை உடனடியாக கவனிப்பது நல்லது. மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பு தன்மை ரொம்பவே எளிதாக நீங்கி ஷைனிங்காக மாறும்.

- Advertisement -

இதற்கு முதலில் உங்களுடைய சமையல் கட்டில் உளுத்தம் பருப்பு இருக்கான்னு பாத்துக்கோங்க. உளுந்து இருந்தால் அதை லேசாக வாணலியில் போட்டு வறுத்து மிக்ஸியில் பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் நைசாக அரைக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த அளவிற்கு பவுடராக அரைக்க முடியுமோ அந்த அளவிற்கு அரைத்து எடுத்து வைத்துக் கொண்டால் போதும் தேவைப்படும் போதெல்லாம் உபயோகப்படுத்தலாம்.

ரெண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மாவுடன் தேவையான அளவிற்கு சுத்தமான தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். தேன் எல்லோருடைய வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும். உளுந்த மாவுடன் தேன் சேர்த்ததும் பேஸ்ட் போல உங்களுக்கு கிடைக்கும். இந்த பேஸ்ட்டை முகத்தில் எங்கெல்லாம் நீங்கள் ஷைனிங்காக இருக்க வேண்டும்? என்று நினைக்கிறீர்களோ, அங்கெல்லாம் தேய்த்து லேசாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படி மசாஜ் செய்வதால் இது ஒரு ஸ்கிரப்பர் போல செயல்படும். கரும்புள்ளி, வெண்புள்ளிகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு இருக்கக்கூடும். இவற்றையெல்லாம் மிக எளிதாக இந்த ஒரு ஸ்க்ரப்பர் நீக்கிவிடும். மேலும் சரும பாதிப்புகளையும் இது தூண்டி விடாது என்பதால் பாதுகாப்பானது. மசாஜ் செய்த பின்பு 10 நிமிடம் மட்டும் உலர விட்டு விடுங்கள். நன்கு உலர்ந்ததும் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். அவ்வளவுதான், முகம் பளபளன்னு பளிச்சுன்னு கொஞ்சம் கூட சொரசொரப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இனி வெயில் பட்டு கை, கால் எல்லாம் கருத்து போய்டுமேன்னு பீல் பண்ணாதீங்க, அதன் நம்ம கிட்ட பத்தே நிமிசத்துல இந்த கருமையை போக்குற டிப்ஸ் இருக்கே. இனி நாளெல்லாம் வெயிலில் இருந்த கூட கவலையே இல்ல.

இந்த ஒரு பேக் வறண்ட சருமம் இருப்பவர்கள் பயன்படுத்த வேண்டாம். அது போல சென்சிடிவ் ஆன சருமம் உள்ளவர்களும் பயன்படுத்த வேண்டாம். சாதாரண சருமம் மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள சருமம் உள்ளவர்கள் தாராளமாக வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வரலாம். தொடர்ந்து இதை பயன்படுத்த உங்களுடைய முகம் செலவே இல்லாமல் மிகுந்த இளமையுடனும், பளிங்கு போல ஜொலிப்புடனும் நிச்சயம் இருக்கும். தேனில் இருக்கும் குணம் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவும். உளுந்து பவுடர் சரும துளைகளுக்குள் சென்று அழுக்குகளை நீக்கி புதிய செல்களை வளர செய்யும். இதனால் ஒரு முறை நீங்கள் போட்டாலே வாரம் முழுவதும் அதற்கான பலனை நீங்கள் காண முடியும்.

- Advertisement -