இனி வெயில் பட்டு கை, கால் எல்லாம் கருத்து போய்டுமேன்னு பீல் பண்ணாதீங்க, அதன் நம்ம கிட்ட பத்தே நிமிசத்துல இந்த கருமையை போக்குற டிப்ஸ் இருக்கே. இனி நாளெல்லாம் வெயிலில் இருந்த கூட கவலையே இல்ல.

- Advertisement -

முகம் கருமை அடைந்தால் அதை உடனே சரி செய்து விடுவோம். இந்த கை, கால்கள் கருமை அடைந்தால், அதை சரி செய்வதற்கான முயற்சியை நாம் எடுப்பதில்லை. அதை அப்படியே விட்டு விடுவதால், கை கால்கள் நிரந்தரமாகவே கருமை அடைந்து விடுகிறது. முகத்தை எப்படி நாம் பராமரிக்கிறோமோ அதைப் போல நம் உடலின் அனைத்து பாகங்களையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இந்த அழகு குறிப்பு பதிவில் கை கால்களில் உள்ள கருமையை எளிமையாக எப்படி நீக்குவது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கை கால் கருமையானது வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களுக்கு இந்த பிரச்சனை வருவதற்கான வாய்ப்பு அதிகம். முகத்திற்கு கிரீம், பேக் போன்றவற்றை போட்டு சரி, செய்து விடுவோம். ஆனால் இந்த கை கால்களை அவ்வளவு சீக்கிரத்தில் சரி செய்ய முடிவதில்லை காரணம் முகமானது மிகவும் மிருதுவாக இருக்கும், கை கால்கள் அப்படி இருக்காது. அதனால் உடனடியாக இந்த கருமை நிறத்தை பழைய படி கொண்டு வரவில்லை என்றால், இதை சரி செய்வது கொஞ்சம் கடினம் தான். இந்த முறையில் பத்தே நிமிடத்தில் உங்கள் கை, கால்கள் கருமை நீங்கி பளிச்சென்று மாறி விடும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இதற்கு முதலில் நாம் ஸ்கிரப் செய்ய வேண்டும். அதற்கு 2 ஸ்பூன் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை மசித்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் 2 ஸ்பூன் தேனையும் நன்றாக கலந்த பிறகு, அதை கருமை அடைந்த உங்கள் பாதம், கைகளில்,தேய்த்து ஐந்து நிமிடம் வரையில் ஸ்கிரப் செய்ய வேண்டும். ஸ்கிரப் செய்யும் போது வெறும் கைகளில் செய்யாமல் ஒரு பப்பாளி துண்டை வைத்து செய்யுங்கள். இதன் மூலம் அங்கு உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி விடும்.

அடுத்ததாக கருமை நிறத்தை வெள்ளையாக மாற்ற பேக் தயார் செய்ய வேண்டும். அதற்கு 2 ஸ்பூன் முல்தானி மட்டி, 1 ஸ்பூன் லெமன் ஜூஸ், 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் மூன்றையும் ஒன்றாக கலந்து பேக் போல போட்டு விடுங்கள். பத்து நிமிடம் கழித்து லேசாக காய்ந்திருக்கும், அந்த நேரத்தில் உங்கள் கைகளை வைத்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு சுத்தமாக கழுவி காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போதே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும். இதை செய்து முடிக்கும் போது கருமை நிறம் நன்றாக மாறி வெண்மையாக இருக்கும். இதை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்யும் போது வெயிலால் ஏற்பட்ட கருமை என்பதே உங்களுக்கு இருக்காது.

இதையும் படிக்கலாமே: குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதும். உங்கள் தலையில் இருந்து ஒரு முடி கூட உதிர்ந்து இனி குப்பைக்கு போகவே போகாது.

இது முகம் கை, கால் மட்டுமல்லாமல் உங்கள் உடம்பில் கருமை அடைந்த மற்ற பாகங்களையும் கூட, இந்த முறையில் சரி செய்து கொள்ளலாம். மிகவும் எளிமையாக நம் வீட்டிலேயே அதிக செலவில்லாமல் இப்படி செய்வதன் மூலம் கருமை இல்லா மேனி அழகை பெறலாம்.

- Advertisement -