சொதப்பலான இட்லி மாவில் கூட சூப்பராக இட்லி சுட சூப்பர் டிப்ஸ்! நீங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க எப்பவாவது யூஸ் ஆகும்.

idli
- Advertisement -

சில சமயம் இட்லிக்கு மாவு அரைக்கும்போது தண்ணீர் ஆகவோ, கட்டியாகவோ அல்லது உளுந்து அதிகமாகவோ அல்லது உளுந்து குறைவாகவோ பக்குவம் தவறிவிடும். இப்படி சொதப்பலான மாவில் இட்லி வார்க்கும்போது இட்லி அவ்வளவு சரியாக வராது. உளுந்து அதிகமாகிவிட்டால் இட்லி துணியோடு ஒட்டிக்கொள்ளும். இட்லி சப்பையாக வரும். உளுந்து குறைவாகி விட்டால், இட்லி கல்லு போல வரும். இப்படி சொதப்பலாக மாவு அரைக்கும் சமயங்களில் என்ன செய்யலாம்.

idly-maavu3

மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிவிட்டது, மாவு கொஞ்சம் தண்ணி ஆகிவிட்டது என்றால் என்ன செய்வது? நம்முடைய வீட்டில் பெரும்பாலும் வடித்த சாதம் இருக்கும். அந்த சாதத்தை மிக்ஸியில் போட்டு ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மொழுமொழுவென கெட்டியாக அரைத்து அதை இட்லி மாவில் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து இட்லி வார்த்தால் இல்லை துணியில் ஒட்டாமல் சூப்பராக வரும். தேவைக்கு ஏற்ப கொஞ்சமாக மாவை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

கொஞ்சமாக வெள்ளை இலேசான அவல், வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். சாதம் இல்லாத சமயத்தில் அந்த அவலை தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் ஊற வைத்து, அரைத்து உளுந்து அதிகமான மாவில் கலந்து, இட்லி சுட்டாலும் இட்லி சூப்பரா வரும்.

அடுத்தபடியாக சில சமயம் இட்லிக்கு மாவு ஆட்டும் போது உளுந்து உபரி குறைவாகிவிடும். அப்போது இட்லி கல்லு போல வரும். அந்த சமயத்தில் உங்களுடைய வீட்டில் அப்பளம் இருந்தால், அந்த அப்பளத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து, பிறகு மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மொழுமொழுவென அரைத்து இட்லி மாவில் ஊற்றி கலந்து இட்லி சுட்டு பாருங்கள் வித்தியாசம் தெரியும். இட்லி பஞ்சு போல சாஃப்டாக வரும்.

- Advertisement -

சரி, இதை எதுவுமே செய்வதற்கு நேரமில்லை எனும் பட்சத்தில் இட்லி மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து அதில் இட்லி ஊற்றி பாருங்கள். இட்லி வழக்கம் போல் இல்லாமல், சாஃப்டாக வரும்.

aval-idli3

சில சமயம் இட்லி மாவில் தோசை ஊற்றினால் தோசை சரியாக வராது. தோசைக்கல்லில் மாவு உருண்டை, உருண்டையாக உருளும். இப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் அரிசி மாவை கொஞ்சமாக தண்ணீரில் கலந்து, இட்லி மாவுடன் சேர்த்து கரைத்து அதன் பின்பு தோசை ஊற்றினால் தோசை உடனடியாக மொறுமொறுவென வரும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

idli

சரிங்க, இது எல்லாமே தெரியும். ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு நேரமில்லை. காலையில் இட்லி வார்ப்பதற்காக இரவே மாவை ஆட்டி வைத்து விட்டீர்கள். காலை மாவு ரொம்பவும் நீர்த்து விட்டது என்றால், காலையிலேயே இட்லி மாவை ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அந்த மாவை எடுத்து இட்லி வார்த்தால் நன்றாக வரும். மாவு ரொம்ப கெட்டியாக, அரிசி மாவு அதிகமாக உள்ளது, என்னும் பட்சத்தில், கொஞ்சமாக ஐஸ் வாட்டரை ஊற்றி அந்த மாவை கரைத்து இட்லி ஊற்றி வைத்தாலும் இட்லி சரியான பக்குவத்தில் கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -