நீங்க மாவு பிசைந்து சப்பாத்தி சுட்டா அப்பளம் மாதிரி வருதா? மாவு பிசைய தெரியாதவர்கள் கூட, சாஃப்டாக சப்பாத்தி செய்ய ஒரு ஐடியா!

chappathi
- Advertisement -

சில சமயம் நன்றாக மாவு பிசைய தெரிந்தவர்கள், சப்பாத்தியை சுட்டு எடுத்தால் கூட அந்த சப்பாத்தி அப்பளம் போல வரும். சாஃப்ட் ஆகவே இருக்காது. சொதப்பலான சப்பாத்தி மாவில் கூட, சாஃப்ட் சப்பாத்தி சுடுவதற்கு ஒரு டிப்ஸ், சப்பாத்தி நன்றாக உப்பி வருவதற்கு ஒரு டிப்ஸ், சப்பாத்தி மாவை எப்படி அரைத்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஒரு டிப்ஸ். இவைகளை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கும் சூப்பரான சப்பாத்தி செய்ய ஆசை இருந்தால், இந்த பதிவை முழுமையாக படித்து எல்லாவற்றையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

potato-urulai

முதல் டிப்ஸ், சப்பாத்தி மாவை சொதப்பலாக பிசைந்து விட்டோம். சப்பாத்தி அப்பளம் போல வருகிறது. ஒரு சப்பாத்தியை சுட்டும் பாத்துட்டீங்க. மாவை அப்படியே வைத்து விடுங்கள். ஒரு உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் போட்டு நன்றாக வேகவைத்து அதனுடைய தோல் உரித்து உருளைக்கிழங்கை நன்றாக மசித்து இந்த சப்பாத்தி மாவோடு போட்டு நன்றாக பிசைந்து, மீண்டும் சப்பாத்தியை செய்து பாருங்கள். சப்பாத்தி சாஃப்ட் ஆக வரும்.

- Advertisement -

நீங்கள் எவ்வளவு மாவை பிசைந்து வைத்து இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு தேவையான உருளைக்கிழங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு கப் மாவு என்றால், ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு போதுமானது.

Chapathi maavu

இரண்டாவது டிப்ஸ். வறமிளகாய் 2, வேர்கடலை 1 ஸ்பூன், முந்திரி 6, இந்த மூன்று பொருட்களையும் லேசாக வறுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு பிசையும்போது தேவைக்கு ஏற்ப இந்த மசாலா பொடியை சப்பாத்தி மாவில் போட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் சப்பாத்தி வித்தியாசமாக சுவையாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

மூன்றாவது டிப்ஸ். என்னதான் சப்பாத்தியை சூப்பராக சுட தெரிந்திருந்தாலும், கல்லில் போட்டு சப்பாத்தி சுடும்போது உப்பி வரவில்லை என்று கவலைப் படுபவர்களுக்கு இந்த டிப்ஸ். சப்பாத்தி மாவை எப்போதும்போல பிசைந்து வைத்து விட்டீர்கள். அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல முதலில், மாவின் உள்ளே குழிசெய்து கொள்ள வேண்டும். (இந்தக் குளியல் தான் மாவில் லேயர் வரப்போகிறது.)

chappathi1

அதன் பின்பு அந்த மாவை அப்படியே மோதகம் போல செய்ய வேண்டும்‌. ஆனால் உள்ளே பூரணம் வைக்கப் வைக்கப் போவது கிடையாது. இப்போது இந்த கொழுக்கட்டையின் மேல் பக்கத்தில் இருக்கும் எக்ஸ்ட்ரா மாவை தனியாக எடுத்து விட வேண்டும். மீதமிருக்கும் மாவை அப்படியே உருண்டை பிடித்து, அப்படியே திரட்ட வேண்டும். நடுவில் ஒரு லேயர் உங்களுக்கு உருவாகி இருக்கும்.

chapathi1

சப்பாத்தியை மெல்லமாக நடுவில் மட்டும் அழுத்தித் தேய்க்காமல் பக்கவாட்டில், லேசாக அழுத்தம் கொடுத்து வட்ட வடிவத்தில் தேய்த்து சப்பாத்தியை கல்லில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும், மீண்டும் மறுபக்கம் திருப்பி போட்டு ஓரங்களில் மட்டும் லேசாக அழுத்தம் கொடுத்து பாருங்கள். சப்பாத்தி நிச்சயமாக உப்பி வரும். சப்பாத்தி உப்பி வரவேண்டுமென்றால், அடுப்பை கொஞ்சம் வேகமாக தான் வைக்க வேண்டும். இந்த டிப்ஸை நிச்சயமா ட்ரை பண்ணி பாருங்க ஒரு வாட்டி.

chappathi2

நான்காவது டிப்ஸ். உங்களுடைய வீட்டில் கோதுமையை வாங்கி அரைக்கும்போது 2 கிலோ கோதுமை, 1 கிலோ சம்பா கோதுமையை சேர்த்து அரைத்தால் அது ஆரோக்கியமான சப்பாத்தியாக இருக்கும். 5 கிலோ கோதுமைக்கு, 50 கிராம் சோயாபீன்ஸ் தான் பயன்படுத்த வேண்டும். இதுதான் சரியான அளவு. மேல் சொன்ன டிப்ஸ்களை பின்பற்றி சப்பாத்தி செய்து பாருங்கள். உங்கள் வீட்டு சப்பாத்தியில் நிச்சயமாக வித்தியாசம் தெரியும்.

- Advertisement -