உங்களுடைய சொத்தே உங்களுக்கு பிரச்சனையாக உள்ளதா? ராசியில்லாத வீடு, நிலம் கூட ராசியாக மாற வேண்டும் என்றால் இந்தப் பிள்ளையாரை வழிபட்டாலே போதுமே!

சொத்து இல்லாதவர்களுக்கு ஒரே பிரச்சனை, சொத்து இல்லை என்பது தான். சொத்து உள்ளவர்களுக்கு பல பிரச்சனை என்று சொல்வார்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய சொத்தே, உங்களுக்கு பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆன்மீக ரீதியான தீர்வை தேடுபவர்களுக்கு தான் இந்தப் பதிவு. குறிப்பாக ஒரு நிலத்தை வாங்கிய நாள் முதல் உங்களுக்கு பிரச்சனைகள் தொடர்கிறதா? வாங்கிய நிலம் உங்களுக்கு, தொடர் தோல்விகளை கொடுக்கின்றதா? அந்த நிலத்தை அடுத்தவர்கள் கைக்கு விற்கவும் முடியவில்லையா? நிலம் வாங்கி விட்டீர்கள். வீடும் கட்ட தொடங்கி விட்டீர்கள். ஆனால், அந்த வீட்டை முழுமையாக கட்டியும் முடிக்க முடியவில்லை. வீடு கட்டி குடி சென்றும் நிம்மதி இல்லை. இப்படியாக உங்களுடைய சொத்து சம்பந்தப்பட்ட எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி அது நிச்சயம் தீரும். இந்த பரிகாரத்தை செய்தால்.

pillaiyar1

இதற்கு நீங்கள் ஒரு வளர்பிறை சதுர்த்தி நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த தினத்தில் உங்களுடைய நிலத்தில் இருக்கும் ஒரு கைப்பிடி மண்ணை குலதெய்வத்தையும், விநாயகப்பெருமானையும் வேண்டி எடுக்கவேண்டும். நிலமாக இருந்தால் அதிலிருந்து அப்படியே ஒரு பிடி மண் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டத் தொடங்கி விட்டால், அதை சுற்றி இருக்கும் அல்லவா அதிலிருந்து ஒரு கைப்பிடி மண் எடுத்து கொள்ளலாம். அந்த மண்ணை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

அடுத்தபடியாக சுத்தமான இடத்தில் இருந்து களிமண் கொஞ்சம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் உங்கள் வீட்டு பூஜை அறைக்கு எடுத்துக்கொண்டு வாருங்கள். இப்போது களிமண்ணையும் நீங்கள் உங்கள் நிலத்தில் இருந்து எடுத்து வந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணையும் ஒன்றாக போட்டு பிசைந்து சிறிய அளவில் உங்களுக்குத் தெரிந்த மாதிரி ஒரு விநாயகர் உருவத்தை செதுக்கி கொள்ளுங்கள். களிமண் விநாயகர். கொஞ்சமாக மண்ணில் ஊற்றி பிசையும் தண்ணீரில் மஞ்சள் பொடி போட்டுக் கொள்ளுங்கள்.

vinayagar1

உங்களுக்கு விநாயகர் ரூபத்தில் விநாயகரைப் பிடிக்க தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணோடு, களிமண்ணை சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை பிடிப்பது போல கூட அந்தப் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய சவுகரியம். ஆனால் விநாயகரை நீங்கள் அந்த களிமண்ணில் ஆவாஹனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

இந்தப் பிள்ளையாரை ஒரு செப்பு  தட்டிலோ அல்லது பித்தளைத் தாம்பாளத் தட்டில் அமர வைக்க வேண்டும். அவரின் பாதங்களில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விடுங்கள். தொடர்ந்து 48 நாட்கள் உங்கள் வீட்டில் இருக்கும் இந்தப் பிள்ளையாருக்கு தொடர்ந்து நீங்கள் பூஜை செய்ய வேண்டும்.

vinayagar-chathurthi1

தினமும் விநாயகருக்கு பிடித்த அருகம்புல்லால் அலங்காரம் செய்ய வேண்டும். பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். நிவேதனமாக விநாயகருக்கு பிடித்த உணவு பண்டங்களை வைக்கவேண்டும். உதிரி புஷ்பங்களால்ல் பின்வரும் மந்திரத்தை சொல்லி 108 முறை உச்சரிக்க வேண்டும்.

ஓம் சதுர்த்தி கர்த்தா மங்கல ஸ்வேதா!

Vinayagar-potri-1

நிச்சயம் உங்களுக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அதற்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் வீடு கட்டி குடி போய் அதில் வாஸ்து பிரச்சினை இருக்கின்றது என்றாலும் இந்த வழிபாட்டை செய்து பார்க்கலாம். நிச்சயம் பலனுண்டு நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு மட்டும். இறுதியாக 48 நாட்கள் கழித்து இந்த விநாயகரை கொண்டுபோய் ஆற்றங்கரையில் கரைத்து விடலாம்.

vinayagar6

அதாவது விநாயகர் சதுர்த்தி விநாயகர் எப்படி கரைப்பது அதேபோல்தான் இந்த விநாயகரும். முயற்சி செய்து பாருங்கள் பல பெரிய கஷ்டங்கள் கூட, விநாயகரை உண்மையோடு வழிபாடு செய்வதன் மூலமாக கஷ்டம் இருந்த தடம் காணாமல் போன கதைகள் பல உண்டு என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தமிழரின் பாரம்பரிய வாசனை திரவியம் ஜவ்வாதுவில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.