வீடு நிலம் போன்ற சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு நினைவாக, இந்த மந்திரத்தை 15 நாள் உச்சரித்தாலே போதும்! அந்த முருகப்பெருமானே அவதாரமெடுத்து வந்து நிச்சயம் உதவி செய்வார்.

murugan-om

இன்றைய சூழ்நிலையில் பூர்வீக சொத்து பத்து வைத்திருப்பவர்களால் தான், சுகமாக வாழ முடிகிறது. சுயமாக சம்பாதித்து ஒரு சதுர அடி மண்ணைக் கூட நமக்காக சொந்தமாக்கிக் கொள்ள முடியவில்லை. காலமும் சூழ்நிலையும் அந்த அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது. உங்களுக்கும் சுயமாக சம்பாதித்து சொத்து வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தால், அந்த கனவு நினைவாக உங்களின் விடா முயற்சி என்பது மிக மிக அவசியம். அதோடு சேர்த்து அந்த முருகப் பெருமானின் ஆசீர்வாதத்தையும் நாம் பெற வேண்டும்.

murugar1

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுளே மனித ரூபத்தில் வந்து நமக்கு உதவி செய்வார் என்ற எண்ணம் இருந்தால், மட்டும் இந்த பதிவினை தொடர்ந்து படித்து பயனடையுங்கள். நிச்சயம் உங்களுடைய எண்ணம் நிறைவேற இந்த மந்திரம் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

வீடு நிலம் அல்லது காடு கழனி தோட்டம் வாகனம் இப்படியாக என்ன சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் இருந்தாலும் சரி, தேய்பிறை சஷ்டியில் இருந்து 15 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எப்போதுமே வாழ்க்கையில் வளரக் கூடிய சூழ்நிலை வேண்டுமென்றால், வளர்பிறையில்தான் பரிகாரத்தை செய்ய வேண்டும்.

Arugampul juice benfits Tamil

முதலில் சுத்தமான அருகம்புல்லை எடுத்து கழுவி, சிவப்பு நிற நூலில் தொடுத்து மாலையாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கம்போல பூஜை என்றால் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, முருகனுக்கு நெய் தீபம் ஏற்றுவது சிறப்பு. முடியாதவர்கள் நல்லெண்ணெயில் தீபமேற்றி கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது.

- Advertisement -

தயாராக இருக்கும் இந்த அருகம்புல் மாலையை உங்கள் வீட்டில் இருக்கும் முருகனின் திரு உருவ படத்திற்கு அணிவித்து விட்டு, அதன்பின்பு ஒரு மனப் பலகையின் மீது, அமர்ந்து, பின் வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்யும்போது, முருகனுக்கு கட்டாயம் நிவேதனமாக ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும். இரண்டு பேரீச்சம்பழங்களை ஆவது நைவேத்தியமாக வையுங்கள். அது தான் சரியான முறை. உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றியைத் தரக்கூடிய அந்த மந்திரம் இதோ!

murugan

ஓம் மங்கள கார்த்திகேயா
சரவணபவா ஹ்ரீம் காரிய
சித்திதராயே நமோ நம!

இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிப்பது மிகவும் சிறந்தது. 27 க்கும் மேல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் உச்சரித்து கொள்ளலாம். அதில், எந்த ஒரு தவறும் கிடையாது. பொதுவாகவே அருகம்புல் என்றால், விநாயகருக்கு தான் சமர்ப்பணம் செய்வோம். ஆனால் இந்த வழிபாட்டு முறையில் சிவப்பு நிற நூலில் தொடுத்த அறுகம்புல்லை முருகப்பெருமானுக்கு அணிவித்து வழிபாடு செய்தோமேயானால், நிச்சயம் கை மேல் பலன் உண்டு,  என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நாளை இந்திர ஏகாதசி. இதை மட்டும் செய்தால் அதிகப்படியான பலன்களை பெறலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.