ஏழேழு தலைமுறைக்கும் உங்கள் சொத்து, உங்கள் வாரிசுகளின் கையில் தான் இருக்கும். பரம்பரை சொத்துக்களை பத்திரமாக பாதுகாத்து வைக்க ஒரே ஒரு வெற்றிலை இருந்தால் போதும்.

vetrilai
- Advertisement -

பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய சொத்துக்கள் நிறைய உங்கள் குடும்பத்திற்கு உள்ளதா. நீங்கள் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. உட்கார்ந்து சாப்பிட்டாலே மூன்று தலைமுறைக்கு உங்கள் சொத்துக்கள் தாங்கும். சொத்துக்கள் இருந்தால் மட்டும் போதுமா. அந்த சொத்துக்களை அழியாமல் பாதுகாத்து வைக்க வேண்டிய திறமையும் நம்மிடம் இருக்க வேண்டும். நமக்கு சொத்துகளை சம்பாதித்து வைக்க முடியவில்லை என்றாலும், நம்முடைய முன்னோர்கள் பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்துக்களையாவது பாதுகாத்து வைத்திருக்க தெரிய வேண்டும்.

sand

நிறைய பேர் இன்றைய சூழ்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது, எதிர்பாராத செலவு வந்து விட்டது, குழந்தைகளின் திருமணம், உடல் உபாதைகளுக்கு மருத்துவ செலவு, என்று தங்களுடைய பிரச்சனைகளுக்காக தங்களுடைய குடும்ப பரம்பரைச் சொத்தை விற்று அதில் கிடைக்கக்கூடிய பணத்தின் மூலம் பிரச்சினைகளை சமாளித்து வருகிறார்கள். நிறைய சொத்து இருந்தால் பரவாயில்லை. விற்று விற்று சாப்பிடலாம். சொந்தமாக ஒரே ஒரு வீடு, அல்லது ஒரே ஒரு நிலம் தான் உள்ளது. அதை கூட விற்கக்கூடிய நிலைமைக்கு சென்று விட்டால் பிறகு என்னதான் செய்வது.

- Advertisement -

நீங்கள் சம்பாதித்து உங்களுடைய பிள்ளைகளுக்காக வைத்த சொத்து பத்திரமாக இருக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுடைய முன்னோர்கள் உங்களுக்காக சம்பாதித்து வைத்திருக்கும் சொத்து அழியாமல் உங்களுடனே இருக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். சொத்து பத்திரம் பத்திரம் உங்கள் பரம்பரை கையிலேயே, உங்களுடைய அடுத்தடுத்த வாரிசுகளுடைய கையிலேயே இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன.

vetrilai-kodi

உங்களுடைய சொத்து இருக்கக்கூடிய இடத்தில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த மண்ணை, ஒரு வெற்றிலையில் வைத்து சுருட்டி அந்த வெற்றிலைக்கு மேலே ஆலமரத்தின் இலை வைத்து ஒரு நூல் போட்டு கட்டிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது ஒரு வேப்ப மரக்கன்று நமக்குத் தேவை. தயார் செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த வேப்ப மரத்தை நடுவதற்காக ஒரு இடத்தை தேடிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய சொந்த இடமாக இருந்தாலும் சரிதான். அல்லது காடு, மேடு என்றபடி மரத்தை வெட்டாத இடங்களில் ஏதாவது இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

veppamaram

மரத்தை நடுவதற்காக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து விட்டீர்கள். மரக்கன்றை நடுவதற்கு முதலில் ஒரு சிறிய பள்ளத்தை தோண்டி கொள்ளுங்கள். அந்தப் பள்ளத்தில் முதலில் வெற்றிலையின் மூட்டை கட்டி வைத்திருக்கின்றோம் அல்லவா மண்முடிச்சு, அதை பூமிக்குள் வைத்து விடுங்கள். அதன் மேலேயே இந்த வேப்பம் கன்றை வைத்து மண்ணை போட்டு மரத்தை நட்டு விடுங்கள்.

vetrilai

வெற்றிலையில் உங்களுக்கு சொந்தமான மண் உள்ளது. அந்த மண்ணை வேப்ப மரத்தின் வேர் பூமியின் இருக்க பிடுத்துக்கொள்ளும். எப்படி வேப்ப மரம் வளர வளர, வேப்ப மரத்தின் வேர் மண்ணை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமோ, இதேபோல்தான் உங்களுடைய சொத்தும் உங்கள் குடும்பத்தில் நிலைத்து இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாந்திரீக ரீதியான பரிகாரத்தை செய்து உங்களுடைய சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற இந்தக் கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -