கையில பணம் சேராமல் போனதற்கு இப்படி ஒரு காரணம் இருக்குதா? சேமிக்கிற பணத்தை எங்க வைக்கிறீங்க! தினசரி செலவுக்கு தேவைக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கிறீங்க! சூட்சமமே இதுலதான் அடங்கியிருக்கு.

thinking-cash
- Advertisement -

சேமிக்கின்ற பணம் கையில் தங்கவில்லை, வருமானம் ஒருபக்கம் வந்து கொண்டே இருக்கின்றது. செலவு ஒரு பக்கம் ஆகிக் கொண்டே இருக்கின்றது. இதுதான் நம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய பிரச்சினை. சேமிப்பை உயர்த்த, செலவுகளை கட்டுப்படுத்த வாஸ்துப்படி, ‘செலவு செய்யக்கூடிய பணத்தை எங்கே வைக்க வேண்டும்? சேமிக்கக்கூடிய பணத்தை எங்கே வைக்க வேண்டும்?’ என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்துகொள்ள போகின்றோம். இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள சின்ன சின்ன சூட்சும ரகசியங்களை பின்பற்றினாலே போதும். வாழ்க்கையில் வரக்கூடிய பல வகைப்பட்ட பிரச்சனைகளிலிருந்து சுலபமாகத் தப்பித்துக் கொள்ளலாம். கெட்ட நேரத்திலும் கூட!

money

சுற்றி வளைக்க வேண்டாம் நேரடியாக பதிவுக்குப் சென்றுவிடலாம். உங்களுக்கு கையில் இருப்பு இருக்க வேண்டும். தங்கம் நிலையாக அடகு கடைக்கு போகாமல் இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் சொத்துக்கள் அடமானம் செல்லாமல் இருக்க வேண்டும். அதாவது நிலையாக எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பொருட்களை மட்டும் தான் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். சந்திர பகவானும் சனி பகவானும் சேர்ந்து இருக்கக்கூடிய இடம்தான் இந்த தென்மேற்கு மூலை.

- Advertisement -

பொதுவாக தென்மேற்கு மூலையில் தான் பீரோ வை வைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால், தென்மேற்கு மூலையில் வைக்க கூடிய பணமாக இருந்தாலும், தங்க நகையாக இருந்தாலும் அதை அடிக்கடி எடுத்து பயன்படுத்தக்கூடாது. அதாவது கைதொட்டு அதை அந்த இடத்திலிருந்து நகர்த்திக் கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது.

money

தென்மேற்கு மூலையில் வைக்கப்பட்ட பொருட்களை அடிக்கடி எடுத்து தேவைக்காக பயன்படுத்திக்கொண்டே இருந்தால், அந்த குறிப்பிட்ட பொருள் சேமிப்பில் தாங்காது. ஆக, தென்மேற்கு மூலையில் வைக்கப்பட்ட பணத்தை தினம்தோறும் செலவு செய்வதற்காக எடுக்கவே கூடாது. ஒரு டப்பாவில் போட்டு சேமிப்பு என்று எடுத்து தென்மேற்கு மூலையில் பீரோவில் வைத்தால், அதிலிருந்து செலவுக்காக நீங்கள் பணத்தை எடுக்கக்கூடாது. தினசரி செலவுக்கு கட்டாயம் தென்மேற்கு மூலையில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்யவே கூடாது. புரிந்ததா?

- Advertisement -

தினசரி பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் நகைகளையும் தென்மேற்கு மூலையில் இருக்கும் பீரோவில் வைத்து எடுத்துப் போடக் கூடாது. அந்த இடத்தில் ஒரு பொருளை வைத்து விட்டால் அதை நீங்க டிஸ்டப் பண்ண கூடாது. அது அப்படியே இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒருமுறை தேவைப்படுகிறது, அப்படி இல்லை என்றால் எப்பவாவது ஒரு முறை தான் தேவைக்காக அந்த இடத்தில் இருந்து பணத்தை எடுப்பீர்கள் எனும் பட்சத்தில் தான், அந்த இடத்தில் உள்ள பொருட்களை நீங்கள் நகர்த்த வேண்டும். நிரந்தரமாக சேமிக்கப்படும் பணம், நிரந்தரமாக நம்மிடத்தில் தங்க வேண்டும் என்று நினைக்கும் சொத்து பத்திரம், அடிக்கடி பயன்படுத்தாத தங்க நகை இவைகளை அந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

vasthu for study room

தென்மேற்கு மூலையில் பீரோவை எப்படி வைப்பது? ‘தெற்கு, கிழக்கு’ பார்த்தவாறு உங்கள் வீட்டு வாசல் இருந்தால், உங்களுடைய பீரோ தென்மேற்கு மூலையில் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். ‘மேற்கு, வடக்கு’ திசை நோக்கி உங்களது வீட்டு வாசல் இருந்தால், தென்மேற்கு மூலையில் உங்களுடைய பீரோ வடக்கே பார்த்தவாறு இருக்க வேண்டும். இடவசதி உள்ளவர்கள் உங்கள் வீட்டு பீரோவை இப்படி அமைத்துக் கொள்ளுங்கள். அந்த இடத்தில் பணம் கட்டாயம் தங்கும்.

- Advertisement -

bero

தென்மேற்கு மூலையில் பீரோ வைக்க வசதியில்லை. உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் தங்கம் வேண்டும் என்றால் என்ன செய்வது? ஒரு ஜாடியில் கல் உப்பை நிரப்பி, மூடி போட்டு வைத்து விடுங்கள். அந்த இடத்திலிருந்து உப்பை கூட எடுத்து பயன்படுத்த கூடாது. காசு செலவாகிவிடும். உப்பும் கைபடாமல் அப்படியேதான் இருக்க வேண்டும். தேவை எனும்போது அந்த உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு மீண்டும் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

Gold rate in Saravana stores

அடுத்தபடியாக தினசரி செலவு செய்யும் பணம், அடிக்கடி போட்டுக் கொள்ளும் நகைகளா இருந்தால் மட்டும் குபேர திசை என்று சொல்லப்படும் வடக்கு திசையில் வைத்துக்கொள்ளலாம். எடுக்க எடுக்க பணம் சுரந்து கொண்டே இருக்கும். இந்த இடத்தில் பணம் நிரந்தரமாக தங்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கட்டாயம் செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துகொண்டே தான் இருக்கும். இருப்பினும் கையில் இருப்புத் தொகையை நிலைநிறுத்த முடியாத அளவிற்கு சில சூழ்நிலைகள் வரும்.

guberar2

உங்களுடைய வீட்டில் வடக்கு பார்த்த வாறு ஏதேனும் அறை இருந்தால், அந்த அறையில் தினசரி செலவு செய்யும் பணத்தை தெற்கிலிருந்து, பீரோவை வடக்குப் பார்த்தவாறு வைத்து அந்த பீரோவுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

money

இடவசதி இல்லாதவர்கள் இரண்டு பீரோவை எல்லாம் வைத்துக்கொள்ள முடியாது என்று சொல்பவர்கள், தென்மேற்கு மூலையில் பீரோவை வைத்திருந்தாலும், தினசரி செலவுக்காக அந்த இடத்தில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம். தனியாக ஒரு டப்பாவில் போட்டு வீட்டில் வடக்குப் பக்கம் இருக்கக்கூடிய அலமாரிலோ டிராவிலோ வைத்து பணத்தை செலவு செய்யுங்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ஒரு கைப்பிடி அவலை உங்கள் வீட்டு பூஜை அறையில் இன்று, இப்படி வைத்தாலே போதும். வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல வாய்ப்பே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -