ஒரு கைப்பிடி அவலை உங்கள் வீட்டு பூஜை அறையில் இன்று, இப்படி வைத்தாலே போதும். வீட்டில் இருக்கும் மகாலட்சுமி வெளியே செல்ல வாய்ப்பே இல்லை.

mahalashmi1

பொதுவாகவே வெள்ளிக்கிழமை என்றால் எல்லோரது வீட்டிலும் மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு, வீடு சுபிட்சம் அடைய பூஜை செய்வார்கள். இந்த வெள்ளிக்கிழமை பூஜையை மேலும் சிறப்பானதாக மாற்ற நாம் என்ன செய்ய வேண்டும்? அந்த மகா விஷ்ணுவின் ஆசீர்வாதத்தையும், மகாலட்சுமியின் ஆசீர்வாதத்தையும் முழுமையாகப் பெற ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எல்லோருக்கும் இருக்கக்கூடிய கஷ்டம் பணக்கஷ்டம். இந்த பண கஷ்டம் சீக்கிரமே தீருவதற்கு ஒரு கைப்பிடி அவல் போதும் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த அவலை வெள்ளிக்கிழமை அன்று என்ன செய்தால், நம் வறுமை நீங்கும்? இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

poojai

வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் காலை வேளையில் பூஜை செய்பவர்களாக இருந்தாலும் சரி, மாலைவேளைகளில் பூஜை செய்வதாக இருந்தாலும் சரி, காலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு, சுத்தமான பின்பு உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய அவலை எடுத்து, ஒரு கைப்பிடி அளவு, ஒரு கிண்ணத்தில் போட்டு சுத்தமான தண்ணீரை ஊற்றி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லத்தை அதில் தூள் செய்து போட்டு விடுங்கள். அது அப்படியே ஊறட்டும். இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் வரை ஊறினால் போதும்.

தண்ணீரில் ஊறிய அவலை மகாலட்சுமிக்கு பூஜை செய்யும்போது, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். எப்போதும் போல தீபம் ஏற்றி, தாம்பூலம் வைத்து மகாலட்சுமிக்கு தெரிந்த மந்திரத்தை சொல்லி உங்கள் வீட்டு வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, மகாலட்சுமி முன்பாக வைத்த அந்த அவலை எடுத்து, எறும்புகளுக்கு அல்லது காக்கை குருவிகளுக்கோ மற்ற பறவைகளுக்கோ தானமாக இட வேண்டும்.

pooja-room

நாராயணருக்கு கிருஷ்ண பரமாத்மாவுக்கு மிகவும் பிடித்த இந்த அவலை, மகாலட்சுமிக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில் நம்முடைய வறுமை நீங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, இந்த முறையில் வாயில்லா ஜீவன்களுக்கு தானம் செய்யும்போது, இந்த தானம் நமக்கு கோடி புண்ணியத்தை தரும். நம் கர்ம வினையும் குறைவதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

அனேகமாக கிருஷ்ண பரமாத்மா, குசேலரின் கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். இந்த ஒரு கைப்பிடி அவல் மூலமாகத்தான் குசேலர் ராஜ வாழ்க்கையை பெற முடிந்தது. நீங்களும் உங்களுடைய குடும்பமும் வறுமையில் இருந்து நீங்கி, சுகபோகமான வாழ்க்கையைப் பெற வெள்ளிக்கிழமைகளில் எறும்புகளுக்கு இந்த ஒரு கைப்பிடி அவலை இனிப்பு சுவை சேர்த்து தானமாக கொடுத்து தான் பாருங்களேன்!

aval

வாரம்தோறும் இந்த தானத்தை நீங்கள் செய்யலாம். உங்களுடைய குடும்பம் சுபிட்சம் அடைந்து, குலம் விருத்தி அடைந்து, உங்கள் பரம்பரையே வறுமை இல்லாத பரம்பரையாக வாழ்வதற்கு ஒரு சுலபமான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொண்டு இருக்கின்றோம். நிறைவான இந்த வெள்ளிக்கிழமை மாலை பூஜை செய்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, ஒரு கைப்பிடி அவலை தண்ணீரில் போட்டு, வெல்லம் சேர்த்து ஊற வைத்துவிடுங்கள்.

vellam

மாலைப் பூஜையின்போது மகாலட்சுமிக்கு முன்பு இந்த அவலை வைத்துவிட்டு, அதன் பின்பு இந்த பிரசாதத்தை, உங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மரத்தடியில் கொண்டுபோய் வைத்தாலும் சரி, மொட்டை மாடியில் மாலை நேரத்தில் பறவைகள், தான் வசிக்கும் கூட்டிற்கு பறந்து செல்லும். அந்தப் பறவைகளுக்கு சாப்பிடுவதற்காக வைத்தாலும் சரி. புண்ணியம் உங்களுக்கே! நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தொட்டதெல்லாம் வெற்றியாக, நெற்றியில் இதை இட்டுக் கொள்ளுங்கள். குடிசையில் வசிப்பவர்களும், சீக்கிரமே கோட கோபுரத்தின் அதிபதி ஆகிவிடலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.