இந்த ஒரு விஷயம் மட்டும் தெரிந்தால், இந்த பொருளை உங்களுடைய வீட்டில் மலைபோல வாங்கி குவித்து வைத்துக் கொள்வீர்கள்.

sozhi

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு மகத்துவங்கள் மறைந்து தான் இருக்கின்றது. ஆனால் அதை அவர்கள் நமக்கு நேரடியாக சொல்லித் தரவில்லை. இந்த சமயங்களில் இந்த விஷயங்களை செய்தால் நல்லது என்று மட்டும் சொன்னார்களே தவிர, அதற்கான உள் அர்த்தங்களை யாருக்கும் சொல்லாமலேயே சென்றுவிட்டார்கள். அப்படி மறைந்து போன ஒரு விஷயத்தை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sozhi1

சோழி, இந்த பொருள் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த பொருளாக தானே நமக்கு தெரியும். ஆனால் இந்த, சோழிக்குள் இன்னும் மறைந்துள்ள ரகசியங்கள் ஏராளம். அந்த காலத்தில் பெண்கள் பூப்படைந்த சமயத்தில் அவர்களை தனியாக பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் பொழுதை கழிக்க வேண்டும் என்பதற்காக பல்லாங்குழி ஆடக் கூடிய வழக்கம் இருந்தது.

அந்த பல்லாங்குழி ஆடுவதற்கு இப்போது பலபேர் சிறிய கல், புளியில் இருந்து எடுக்கப்பட்ட கொட்டை இவைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால் பல்லாங்குழியை சோழியில் தான் அந்த காலத்தில் ஆடுவார்கள். அந்த சோழி சத்தம் கேட்கும் போது, பெண்கள் பூப்படைந்த சமயத்தில் கெட்ட சக்திகள் அவர்களிடம் நெருங்காமல் இருக்கும். அந்த பெண்களுடைய கைகள் சோழிகளை உரசும் போது அந்த பெண்ணிடம் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

sozhi2

அந்த சோழியை எண்ணி எண்ணி கணக்கு போட்டு ஆடும் போது, அந்த பெண்ணின் அறிவுத்திறனும் புத்திக்கூர்மையும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒரு சோழியில் எத்தனை விஷயங்கள் மறைந்துள்ளது. இந்த சோழி எழுப்பக்கூடிய சத்தத்திற்கு எந்த ஒரு கெட்ட அமானுஷ்ய சக்திகளும் பெண்களை நெருங்காதாம்.

- Advertisement -

அந்தக் காலத்தில் ராணிகள் வாழக்கூடிய அறைகளில் இந்த சோழிகள், அழகுப் பொருட்களாக சிறிய சிறிய பித்தளை பாத்திரங்களில் நிரப்பி வைக்கப்பட்டிருக்கும். அந்த சோழிகளை இளவரசிகள், ராணிகள் கையில் எடுத்து தூக்கி போட்டு சத்தத்தை அடிக்கடி எழுப்பி விளையாடுவார்கள். இதற்கு காரணம் இந்த சோழியில் இருந்து எழக்கூடிய சத்தத்தின் மூலம் அவர்களிடத்தில் ஐஸ்வர்யம் நிலைத்து நிற்கும் என்றதொரு நம்பிக்கையும் இருந்து வந்தது.

sozhi3

சோழிகள் எழுப்பக்கூடிய சத்தத்திற்கு ஏற்ப இளவரசிகள் நடனமாட கற்றுக்கொள்வது, சோழிகளின் மூலம் உருவாக்கிய ஆபரணங்களை அணிந்து கொள்வது சோழிகளை வைத்து பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை விளையாடுவது போன்ற விஷயங்களை நாம் கூட சில பிரம்மாண்ட திரைப்படங்களில் எல்லாம் பார்த்திருப்போம் அல்லவா. இந்த சோழிக்கு என்று தனி மகத்துவம் இருக்கத்தான் செய்கின்றது.

sozhi4

இந்த சோழிகளை 9 வரக்கூடிய கணக்குகளில் நம்முடைய வீட்டில் வைத்துக் கொள்வது நமக்கு அதிகப்படியான நன்மைகளை கொடுக்கும். அதாவது 9, 18, 27 இப்படி 9 வரக்கூடிய கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய டப்பாவில் அந்த சோழிகளை போட்டு அதை நேரம் கிடைக்கும்போது எடுத்து ஆட்டி வைப்பது அல்லது உங்களுடைய கைகளில் எடுத்து அந்த சோழிகளை லேசாக தூக்கி போடும் போது ஒன்றுடன் ஒன்று உரசி சத்தம் வருவது போன்ற செயல்பாடுகளை நீங்கள் செய்துகொண்டே இருக்கலாம்.

mahalakshmi

அந்த சோழியின் சத்தம் உங்கள் வீட்டில் ஒலிக்க வேண்டும் அவ்வளவு தான். இப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் கண்ணுக்கு தெரியாத அமானுஷ்ய கெட்ட சக்திகள் தங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. மகாலட்சுமி கடாட்சம் என்றென்றும் நிலைத்து நிற்கும். முயற்சி செய்து பாருங்கள்.