ஒருமுறை உங்களுடைய வீட்டில் சாம்பாரை இப்படி வைத்து பாருங்கள்! சாம்பாரா? எனக்கு வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டாங்க.

sambar1
- Advertisement -

நம்முடைய சமையல் அறையில் பிரதானமாக இருக்கும் ரெசிபி தான் இந்த சாம்பார். தமிழ்நாட்டில், வீட்டு விசேஷங்கள் என்றால் இந்த சாம்பாருக்கு கட்டாயம் முதலிடம் உண்டு. சாம்பார் இல்லாத பந்தியே நம்முடைய ஊர்களில் கிடையாது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாம்பாரை, வீட்டில் செய்தால் பெரும்பாலும் அவ்வளவாக எல்லோரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். உங்களுடைய வீட்டில் சாம்பாரை ஒருமுறை இப்படி வைத்து பாருங்கள். இந்த சமரை கட்டாயம் எல்லோரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். சூப்பரான சாம்பார் ரெசிபியை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sambar2

முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, துவரம் பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 15 பல் தோல் உரித்து, தக்காளி – 2 நறுக்கி வைத்தது, பூண்டு – 6 பல் தட்டி வைத்தது, பச்சை மிளகாய் – 2, மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், நல்லெண்ணெய் – 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டால் போதும். அதாவது பருப்பு 80% வரை வெந்து வர வேண்டும்.

- Advertisement -

குக்கர் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து மத்தை வைத்து இந்த பருப்பை நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். வேகவைத்த இந்த பருப்பில் நறுக்கிய முருங்கைக்காய் – 1, கத்திரிக்காய் – 2, மிளகாய்த் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சேர்த்து கொஞ்சமாகத் கலந்துவிட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். காய்கள் குழைந்துபோய் வேகக் கூடாது. சரியான அளவில் வேக வேண்டும். (இந்த சாம்பாருக்கு தனியா தூள், சாம்பார் பொடி எதுவுமே தேவையில்லை கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி.)

sambar 3

காய் வெந்ததும் இறக்குவதற்கு 2 நிமிடத்திற்கு முன்பாக பெரிய நெல்லிக்காய் அளவு புளி கரைசலை இந்த சாம்பார் ரோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். புளி சேர்த்த பின்பு சாம்பார் 2 நிமிடங்கள் வரை கொதித்தால் போதும். சாம்பார் உங்களுக்கு ரொம்பவும் திக்காக வேண்டும் என்றால் தண்ணீர் குறைவாக சேர்க்க வேண்டும். கொஞ்சம் தண்ணீராக சாம்பார் இருக்க வேண்டுமென்றால் புளிக்கரைசலுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த சாம்பாரை அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வையுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், வெந்தயம் –  1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், வரமிளகாய் – 2, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – நீள் வாக்கில் வெட்டியது, 2 கொத்து கறிவேப்பிலை இந்த பொருட்களை எல்லாம் போட்டு வதக்கி கொள்ள வேண்டும்.

sambar3

இறுதியாக இந்த தாளிப்போடு 1/2 ஸ்பூன் மிளகாய் தூளையும், 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூளையும் சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு இதை அப்படியே சாம்பாரில் கொட்டி, கலந்து சாம்பாரை ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். 5 நிமிடங்கள் கழித்து தேவைப்பட்டால் கொத்தமல்லி தழையை தூவி சாம்பாரை பரிமாறுங்கள். அட்டகாசமான வாசத்தோடு வித்தியாசமான முறையில் ஒரு சாம்பார் ரெடி. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -