மொறு மொறு, காரசாரமான டைமன்ட் சிப்ஸ்! ஒருவாட்டி உங்க வீட்டுல இப்படி செஞ்சு பாருங்க!

diamond-chips1

சிப்ஸ் வகைகள் என்றாலே எல்லோரும் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தான் வழக்கமாக வைத்திருப்போம். அது எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. நம்முடைய குழந்தைகளுக்கு, நான்கு நாட்களுக்கு தேவையான டிப்ஸை, நம் வீட்டிலேயே தயாரித்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பண்டிகை தினங்களிலும் இந்த டைமண்ட் சிப்ஸை செய்து, பலகாரமாக உறவினர்களுக்கும் கொடுக்கலாம். சுவையான, சுலபமான, காரசாரமான டைமன்ட் சிப்ஸ் எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா?

diamond-chips

டைமன்ட் சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 1 கப், மைதா மாவு – 1 கப், எள்ளு – 1 ஸ்பூன், சீரக தூள் – 1 ஸ்பூன், நெய் – 4 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – ஒரு கொத்து, தேவையான அளவு உப்பு. (பூண்டு – 5 பல், தோல் உரித்தது, வரமிளகாய் – 4)

உங்களுக்கு தேவைப்பட்டால் வெறும் கோதுமை மாவில் கூட இந்த சிப்ஸை செய்து கொள்ளலாம். வெறும் மைதா மாவிலும் செய்யலாம். தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவருடைய விருப்பம்.

mavu

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில், கோதுமை மாவையும், மைதா மாவையும், உப்பையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்பாக சீரகத்தூள் கருவேப்பிலை சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு விடுங்கள்.

- Advertisement -

மிக்ஸி ஜாரில் வரமிளகாயையும், பூண்டையும் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு, கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதை மாவோடு சேர்த்து பிசைய தொடங்குங்கள். இதோடு ஒரு குழிகரண்டி அளவு நெய்யையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, பூரி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். சப்பாத்தி மாவு பதத்திற்கு கொஞ்சம் இலகுவாக பிசைந்து விட்டால் எண்ணெய் குடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

diamond-chips-cutting

பூரி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்திருக்கும் இந்த சிப்ஸ் மாவின் மேல், கொஞ்சம் எண்ணெய் தடவி, மேலே ஒரு தட்டு போட்டு 1/2மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அதன் பின்பாக சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து, பூரி மனையின் தேய்த்தும் டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளலாம். அல்லது கொஞ்சம் பெரிய உருண்டைகளாக பிடித்து, உங்களுடைய சமையல் திட்டு மேல், பெரியதாக மெல்லியதாக தீரட்டிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். எப்படி தேய்த்தாலும், மாவை மெல்லிசாக தேய்க்க வேண்டும் அவ்வளவுதான்.

diamond-cutting

எண்ணெயை நன்றாக சூடுபடுத்தி விட்டி, டைமன் வடிவில் வெட்டி வைத்திருக்கும் இந்த சிப்ஸ் மாவுகளை, எண்ணையில் போட்டு, தீயை மிதமான தீயில் வைத்து, பொரித்து எடுத்தால், டைமன்ட் சிப்ஸ் தயாராகிவிடும். இதை பொரிக்கும் போதே நல்ல மணம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றாக ஆறிய பின்பு, காற்றுப் புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே
1 கப் அரிசி மாவு இருந்தால் போதும். இந்த ரிப்பன் சிப்ஸ் செய்து விடலாம்! பத்து நிமிடத்தில் மொறு மொறு ஸ்னாக்ஸ் ரெடி!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.