1 கப் அரிசி மாவு இருந்தால் போதும். இந்த ரிப்பன் சிப்ஸ் செய்து விடலாம்! பத்து நிமிடத்தில் மொறு மொறு ஸ்னாக்ஸ் ரெடி!

ribben-pakoda3
- Advertisement -

குழந்தைகளுக்கு சிப்ஸ் வகைகளை, கடையில் இருந்து வாங்கி கொடுத்தால் மிகவும் பிடிக்கும். ஆனால், கடையிலிருந்து வாங்கித்தரும் சிக்ஸ் வகைகளில், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பது சந்தேகத்திற்குறியது. உங்களது வீட்டிலேயே, உங்கள் கையால், சுவையான, சூப்பரான ரிப்பன் பக்கோடா போல் இருக்கும், இந்த மொறுமொறு சிப்ஸை, எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த சிகிச்சை செய்து முடித்து விடலாம். ‘அரிசி மாவு ரிப்பன் பக்கோடா சிப்ஸ்’ எப்படி செய்வது? பார்த்து விடலாமா!

ribben-pakoda

அரிசிமாவு சிப்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு – 1 கப், தண்ணீர் – 1 கப், மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், உப்பு – 1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, சில்லி ஃபிளேக்ஸ் – 1 ஸ்பூன் (சில்லி ஃப்ளேக்ஸ் இல்லாதவர்கள், வரமிளகாய் 2, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்), நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை – பொடியாக நறுக்கியது.

- Advertisement -

அகலமான பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொள்ள வேண்டும். எந்த கப்பில் அரிசிமாவை அளந்து எடுக்கிறார்களோ, அதே கப்பில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது. அந்தத் தண்ணீரில் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத் தூள், சில்லி ஃப்ளேக்ஸ், 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், சேர்த்து ஒரு நிமிடம் வரை நன்றாக கொதிக்கவிடுங்கள்.

ribben-pakoda-mavu

அதன் பின்பாக, அடுப்பில் கொதிக்கும் இந்த தண்ணீரில், அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறி கொண்டே இருங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடம் கிளறிய பின்பு, அரிசி மாவு கெட்டி பதத்திற்கு வந்துவிடும். அடுப்பை அணைத்து விட்டு, ஐந்து நிமிடம் அந்த சூட்டிலேயே ஒரு மூடி போட்டு  மூடி வைத்துவிடுங்கள். சூட்டிலேயே அரிசி மாவு நன்றாக வெந்திருக்கும்.

- Advertisement -

அதன் பின்பாக, இந்த மாவை வேறு ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு, அதில் சீரகம் 1 ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தேவையான அளவு சேர்த்து, உங்கள் கைகளை வைத்து நன்றாக பிசைய வேண்டும். அரிசி மாவு கொஞ்சம் சூடாக இருக்கும் போதே பிசையும் பட்சத்தில், அரிசி மாவானது, சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்துவிடும்.

ribben-pakoda1

உங்களுடைய கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு பிசைந்து பாருங்கள். மாவு கையில் ஒட்டக் கூடாத பதத்திற்கு இருக்க வேண்டும். ரொம்பவும் இறுக்கமாக இருப்பது போல் இருந்தால் மட்டும், சுடுதண்ணீர் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். தண்ணீர் தேவைப்படாது. தேவைப்படும் பட்சத்தில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் அளவில் தான், தண்ணீர் சேர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்திருக்கும் மாவை, கொஞ்சம் பெரிய பெரிய உருண்டைகளாக,  பிடித்துக்கொண்டு, சப்பாத்தி கட்டையில் வைத்து, சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்க்கவேண்டும். ரொம்பவும் மெல்லியதாக தேக்க முடியாது. ரொம்பவும் தடிமனாகவும் தேய்க்கக்கூடாது. ரிப்பன் பக்கோடா அளவு தடிமனில் தேய்த்து, கத்தியைக் கொண்டு நீளவாக்கில், சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். மிகவும் பெரியதாக நீள் வாக்கில், இருக்கும் பட்சத்தில் அதிகப்படியான எண்ணெயை வைத்து பொரிக்க முடியாது. என்பதால் குறுக்கே ஒரு வெட்டு போட்டுக் கொள்ளுங்கள்.

ribben-pakoda2

சின்ன சின்ன ரிப்பன் பக்கோடா அளவிற்கு மாவை தயார் செய்து வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை, கடாயில், அடுப்பில் வைத்து, மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும். முதல்முறை பொரிக்கும்போது சிப்ஸின் மொறு மொறு தன்மை கொஞ்சம் குறைவாக இருக்கும். எல்லாம் சிப்ஸையும் ஒருமுறை பொரித்து எடுத்த பின்பு, மீண்டும் அதை இன்னொரு முறை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், அந்த சிப்ஸ் மிகவும் சுவையாக வரும். அதன் மொறுமொறு தன்மை அதிகமாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிப்ஸை நன்றாக ஆற வைத்த பின்பு, காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள மீண்டும். இந்த சிப்ஸை மூன்று நாட்கள் வரைகூட வைத்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையான, ஸ்னாக்ஸ் தயார். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ஒருமுறை உங்கள் வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபுள் சூப்! சுலபமாக செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -