வீட்டில் தண்ணீர் அதிகம் பயன்படுத்தக் கூடாத இடம் எது தெரியுமா? இங்கு தண்ணீர் சென்று கொண்டே இருந்தால் கடன் பிரச்சினை தலைவிரித்தாடும்.

water-cash

தண்ணீரை வீணாக்கக் கூடாது என்பது பொதுவாக நல்ல விஷயமாக இருந்தாலும் வீட்டில் நாம் பயன்படுத்தும் தேவையான தண்ணீரை கூட இந்த இடத்தில் அதிக அளவாக தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தால் நிச்சயம் கடன் தொல்லை ஏற்படும். அது ஏன்? எந்த இடத்தில்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். எந்த ஒரு வீட்டில் தண்ணீர் தொடர்ந்து ஒழுகிக் கொண்டிருக்கும் படியான சூழ்நிலை இருக்கிறதோ! அந்த வீட்டில் கடன் தொல்லை நிச்சயமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

Water

தண்ணீர் குழாய் சரியாக மூடாமல் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருந்தால் அதை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் வீட்டில் பொருளாதார ரீதியான பிரச்சனைகள் மேலோங்க துவங்கும். அது போல் மொட்டை மாடிகளில் வைத்திருக்கும் தண்ணீர் டேங்க், சில வீடுகளில் சரியாக அமைக்கப்படாமல் அதிலிருந்து தண்ணீர் ஒழுகும் படியான நிலை இருக்கும். இது போன்ற நிலையால் வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து காரியதடை நடக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்படும்.

ஒரு வீட்டில் சமையல் அறையில் எப்பொழுதும் தண்ணீர் அதிகமாக தேவைப்படும். இருந்தாலும் அந்த இடத்தில் தரைப் பகுதியில் கண்ணீரை சிந்த விடுவது நஷ்டத்தை குறிக்கிறது. சமையல் அறையில் தரையில் நீங்கள் தண்ணீரை கொட்டி விட்டால் உடனே துடைத்துவிட வேண்டும். அப்பகுதி தண்ணீராக இருக்கும் பொழுது பணக்கஷ்டம் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

water-spill

பாத்திரம் கழுவும் இடத்தில் தான் குறிப்பாக நாம் கவனிக்க வேண்டியது அவசியம். பாத்திரம் கழுவும் இடத்தில் தண்ணீரை எப்பொழுதும் தொடர்ந்து பயன்படுத்தும் படியான சூழ்நிலையை தவிர்த்து விடுங்கள். ஒரு சிலர் ஒரு பாத்திரம் இருந்தாலும் உடனே அதை கழுவி வைத்து விடுவார்கள். இரவு நேரங்களில் எச்சில் பாத்திரத்தை அப்படியே போட்டு வைப்பதை தவிர, மற்ற நேரங்களில் பிரச்சனை இல்லை. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் நீங்கள் தொடர்ந்து தண்ணீரை செலவழித்துக் கொண்டே இருந்தால் அந்த வீட்டில் பணத்தடை மற்றும் கடன் பிரச்சனைகள் அதிகரிக்கும்.

- Advertisement -

தேவையான அளவிற்கு தேவையான நேரத்தில் சிக்கனமாக தண்ணீரைச் செலவு செய்து பாத்திரங்களை கழுவி வைத்து விட வேண்டும். அது போல் இரவு நேரத்தில் பாத்திரத்தைப் போட்டு வைக்காமல் அப்போதே கழுவிக் கவிழ்த்து விடுவது மிகவும் நல்லது. சமையலறையில் அன்னபூரணியும், மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எப்பொழுதும் சமையல் அறையில் தண்ணீர் செலவாகிக் கொண்டே இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

sink-water

அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், ஆன்மீக ரீதியாகவும் தண்ணீரை செலவழிப்பது கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். எப்பொழுதுமே ஈரத்துணியை இரவு நேரங்களில் உலர்த்தி விட்டுவிடுவது மிகவும் நல்லது. ஈரத்தோடு அப்படியே போட்டு வைத்தால் அது தரித்திரத்தை ஏற்படுத்தும் என்பார்கள். குடிக்கும் தண்ணீரை நீங்கள் குடிக்க எடுக்கும் போதும் கீழே சிந்தும் படியாக அமைத்து வைத்திருக்கக் கூடாது. சமையலறையை எப்பொழுதும் உலர்வாக வைத்துக் கொள்வது கடன் பிரச்சினையை தீர்க்கும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் நல்லதே நடக்காதது போல் இருக்கிறதா? கல் உப்பை மட்டும் இப்படி வைத்து பாருங்கள்! துன்பங்கள் தொலையும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.