தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருட்களை போட்டு காய வைத்து தலைக்கு தடவினால், முடி கருகருவென அடர்த்தியாக வளர்ந்து கொண்டே செல்லும்.

hai1r
- Advertisement -

தலை முடி உதிர்வுக்கும், தலை முடி வளராமல் இருப்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். தலைமுடி பிரச்சினையை சரிசெய்ய எவ்வளவோ குறிப்புகளை பின்பற்றி பார்ப்போம். சில பேருக்கு சில பொருட்களை தலையில் போட்டால் ஒத்து வராது. அலர்ஜியை கொடுக்கும். இருக்கின்ற முடியும் கொட்டத் தொடங்கிவிடும். அப்படி எந்தவித அலர்ஜியும் வராமல் எல்லோருடைய தலைக்கும் செட் ஆகும் படி ஒரு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேங்காய் எண்ணெயுடன் பின் சொல்லக்கூடிய பொருட்களை சேர்த்து காயவைத்து தலையில் தடவினால் போதும். முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளர தொடங்கும்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் வெந்தயம் – 1 ஸ்பூன், அரிசி – 1 ஸ்பூன், எள்ளு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, போட்டு அடுப்பை சிம்மில் பற்ற வைத்து லேசாக வறுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த எல்லா பொருட்களும் பொன்னிறமாக வறுபட்டு  வந்தவுடன் கடாயில் இருக்கும் பொருட்களோடு தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன், நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் ஊற்றி, இந்த எண்ணெயை நன்றாக காய்ச்ச வேண்டும். நாம் சேர்த்து வறுத்த 4 பொருட்களின் எசன்ஸ் இந்த எண்ணெயில் இறங்கவேண்டும். மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் எண்ணெயை நன்றாக காய வைத்து வடிகட்டி அந்த எண்ணெயை வெதுவெதுப்பாக இருக்கும்போது தலையில் தேய்க்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் ஒருவருடைய தலைக்கு தான் சரியாக இருக்கும். கொஞ்சம் எண்ணெய் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை. மீதமான எண்ணெயை பாட்டிலில் ஸ்டோர் செய்துவிட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் அந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் லேசாக சூடு செய்து விட்டு அதன் பின்பு எண்ணெயை வெதுவெதுப்பாக இருக்கும்போது தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தலைக்கு எப்படி பயன்படுத்துவது.

- Advertisement -

தலைக்கு குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு  எண்ணெயை தலையில் மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தேய்த்து மசாஜ் செய்து விட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து விடுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். எந்த பக்க விளைவுகளும் வராது.

நாம் எல்லா பொருட்களையும் வறுத்து பின்பு அதில் எண்ணெயை ஊற்றி காய்ச்சி இருப்பதால் தலைவலி சளி தொந்தரவு இருக்காது. உங்களுக்கு இந்த சிம்பிளான ரெமடி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. முடி அடர்த்தியாக வளர்வதோடு கருகருவென வளர்வதற்கும் இந்த எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும்.

- Advertisement -