மீன் வறுக்க போறிங்களா? இப்படி அரைச்சு மீன வறுத்து பாருங்க மொறுமொறுன்னு டேஸ்ட் நாக்குல ரெண்டு நாள் ஆனாலும் அப்படியே நிக்கும்!

fish-fry-masala-tamil
- Advertisement -

சிலருக்கு கறி காய்களை விட மீன் என்றால் அதீத பிரியம் கொண்டு இருப்பார்கள். மீனை வறுத்து கொடுத்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு வித்தியாசமான முறையில் இப்படி அரைச்சி மீன் வறுவல் ஒரு முறை செஞ்சு கொடுத்து பாருங்க அவ்வளவுதான், ரெண்டு நாள் ஆனாலும் அப்படியே நாக்கில் அந்த டேஸ்ட் ஒட்டிக் கொண்டே இருக்கும். சுவையான மீன் வறுவல் எப்படி இந்த முறையில் எளிதில் தயாரிப்பது? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் – 10, பூண்டு பல் – 7, இஞ்சி – ஒரு சிறு துண்டு, கொத்தமல்லி – அரை கைப்பிடி, கருவேப்பிலை – இரண்டு கொத்து, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், தனியா தூள் – அரை ஸ்பூன், மிளகுத்தூள் – கால் ஸ்பூன், சீரகத்தூள் – கால் ஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – அரை மூடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

மீன் வறுவல் செய்வதற்கு முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து முழுதாக அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பூண்டு பல் தோல் உரித்து சேர்க்க வேண்டும். எந்த அளவிற்கு பூண்டு எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு இஞ்சியையும் தோல் நீக்கி துண்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள்.

இவற்றுடன் இரண்டு கொத்து கருவேப்பிலையை கழுவி சேர்த்து, அரை கைப்பிடி கொத்தமல்லியையும் அலசி போட்டுக் கொள்ளுங்கள். மிக்ஸியை இயக்கி நைஸ் பேஸ்டாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்து வந்த இந்த பேஸ்ட்டை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனுடன் மல்லித்தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகிய எல்லாவற்றையும் மேற்கூறிய அளவின்படி சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக அரிசி மாவையும் சேர்த்து கொஞ்சம் எலுமிச்சைச் சாறை விதைகள் இல்லாமல் பிழிந்து கொள்ளுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் கண்சிஸ்டெண்சி வரும் அளவிற்கு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். இதை அப்படியே அள்ளி எடுத்து நீங்கள் பிரஷ்ஷாக சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள மீனின் மீது எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவி பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விட வேண்டும். மசாலா அனைத்தும் மீனுக்குள் நன்கு ஊறி இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
அரிசி உளுந்து அரைக்காமல் கூட இப்படி ஒரு தோசையை முறுகலாக பத்தே நிமிடத்தில் சுட முடியுமே! ரெசிபி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா?

அதன் பிறகு நீங்கள் ஒரு இரும்பு தோசை கல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு மீனாக போட்டு நன்கு எல்லா புறமும் சிவக்க பொறித்து எடுத்தால் சுவையான மீன் வறுவல் தயார்! இதன் சுவையை நீங்கள் அனுபவித்தால் இனி இதே ஸ்டைலில் தான் மீன் வறுவல் தயாரிப்பீர்கள்!

- Advertisement -