இந்த கட்லெட்டை செய்ய அடுப்பே பற்றவைக்க வேண்டாம். முழு ஆரோக்கியமும் கிடைக்க இப்படியும் ரெசிபி இருக்கு தெரிஞ்சுக்கோங்க.

cutlet1
- Advertisement -

சமைத்த உணவை சாப்பிடுவதைவிட, சமைக்காத சில உணவுகளை அப்படியே சாப்பிடுவதில் நம்முடைய உடலுக்கு ஆரோக்கியம் முழுமையாக கிடைக்கும். அந்த வரிசையில் இன்று முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு கட்லெட் ரெசிபியை செய்ய போகின்றோம். சமைக்காமல் இதை எப்படி சாப்பிடுவது என்று பயப்படாதீங்க. இதை சமைக்காமலும் சாப்பிடலாம்.  இதை சமைக்காததால் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், எண்ணெய் ஊற்றி ரோஸ்ட் செய்தும் சாப்பிடலாம். சரி இந்த கட்லெட்டை எப்படி செய்வது. ரெசிபியை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.

செய்முறை

இதற்கு நமக்கு முதலில் முளைகட்டிய பச்சை பயிறு தேவை. பச்சை பயிறை தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் ஊற வைத்துவிட்டு, தண்ணீர் முழுவதையும் வடிகட்டி விட்டு, அந்த பச்சை பயிரை ஈர வெள்ளை காட்டன் துணியில் கட்டி வைத்தால், 24 மணி நேரத்தில் முளைகட்டி வந்துவிடும். அந்த முளைகட்டிய பயிறு வைத்து தான் இந்த கட்லெட்டை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முளைகட்டிய பச்சைப் பயிறு 2 கைப்பிடி, கேரட் துருவல் 1 கைப்பிடி, தேங்காய் துருவல் 1 கைப்பிடி, சின்ன வெங்காயம் 5, கருவேப்பிலை 1 கொத்து, கொத்தமல்லி தலை சிறிதளவு, பச்சை மிளகாய் 1, இஞ்சி தோல் சீவுவது 1/2 இன்ச், சீரகம் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு இதை ஒரு ஓட்டு ஓட்டுகள்.

கொரகொரப்பாக எல்லா பொருட்களும் அரைபட்டு நமக்கு கிடைக்கும். மாவு போல இதை தயார் செய்ய, இதில் நட்ஸ் பவுடரை கலந்து பிசைய வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி, பாதாம், பிஸ்தா வால்நட் போன்ற பொருட்களை போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அந்த பொடியை நாம் அரைத்த முளைகட்டிய பச்சைபயிறு விழுதோடு தேவையான அளவு போட்டு பிசைந்தால், கட்லட் மாவு தயார்.

- Advertisement -

இதை சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து அப்படியே சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். அல்லது வடை போல தட்டி தோசை கல்லில் போட்டு கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திரிப்பி போட்டு, கட்லெட் போல சிவக்க விட்டு சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும். இரண்டு பக்கமும் பொன்முறுவலாக வந்தவுடன் சுடச்சுட சாப்பிடலாம்.

இதையும் படிக்கலாமே: லஞ்ச் பாக்ஸ்-க்கு வெரைட்டி ரைஸ் வித்தியாசமா செய்யணும்னு ஆசைப்படுறீங்களா? இந்த ரைஸ் செஞ்சு குடுங்க… லஞ்ச் பாக்ஸ்ல ஒரு பருக்ககூட மிச்சம் இருக்காது.

இதில் நமக்கு தேவையான எண்ணில் அடங்கா சத்துக்கள் அடங்கியிருக்கிறது. வாரத்தில் ஒரு முறை அல்ல மாதத்தில் இரண்டு முறை இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தாலும், அது முழுக்க முழுக்க ஆரோக்கியம் தான். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -