உங்களுக்கு காரிய வெற்றி உண்டாக, ஆபத்துகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்

hanuman

விதியையும் மதியால் வெல்லலாம் என்கிற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதாவது நமது கர்ம வினைகளுக்கேற்ப, நமக்கு இந்த பிறவியில் விதிக்கப்பட்டிருக்கின்ற எதையும் நற்சிந்தனை மற்றும் நல்ல எண்ணங்களோடு, தூய்மையான இறை பக்தியால் அவற்றை மாற்ற முடியும் என்பதே அப்பழமொழியின் சூட்சமம் ஆகும். அப்படி நமது வாழ்வில் அற்புதமான நன்மைகளை செய்யும் சக்தி வாய்ந்த ஸ்ரீஆஞ்சநேயருக்கு உரிய மந்திரம் இது. இம்மந்திரத்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Hanuman

ஸ்ரீ ஆஞ்சநேய மந்திரம்

ஹங் பவன் நந்தனாய ஸ்வாஹா

சிரஞ்சீவியாக இருக்கின்ற ஸ்ரீ ஆஞ்சநேயருக்குரிய சக்தி வாய்ந்த எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு 108 உரு ஜெபிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் உடல் மற்றும் மன சுத்தியுடன், வீட்டில் சிறிய அளவில் இருக்கும் ஆஞ்சநேயர் படத்திற்கு சிவப்பு நிற மலர்களை சாற்றி, இம்மந்திரத்தை 1008 முறை உரு ஜெபித்து வழிபடுவதால் நீங்கள் ஈடுபடும் எத்தகைய காரியங்களிலும் தடை, தாமதங்கள் ஏற்படாது. திடீர் விபத்துக்கள், ஆபத்துக்கள் ஏற்படாமல் காக்கும். எதிர்மறை சக்திகள், தீய எண்ணம் கொண்ட மனிதர்கள் போன்றவை உங்களையும், உங்களை சார்ந்தவர்களும் அணுகாமல் காக்கும் கவசமாக இம்மந்திரம் இருக்கும்.

hanuman

சித்தர்கள் கூறுகின்ற அற்புத சக்திகளான அஷ்டமா சித்திகள் அனைத்தையும் சாகாவரம் பெற்ற ராம சித்தரான ஸ்ரீ ஆஞ்சநேயர் ராமாயண காவியத்தில் புரிந்து இருப்பதை நாம் காணலாம். தனது ஆத்மநாயகனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெயரை உச்சரிக்கும் எவருக்கும் உடனடியாக வந்து உதவி புரிபவராக ஆஞ்சநேயர் இருக்கிறார். அந்த ஆஞ்சநேயரின் இந்த மந்திரத்தை துதிப்பதால் அவரின் பரிபூரண அருளாசிகள் நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் சகல ஐஸ்வர்யங்கள் பெருக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri anjaneya mantra in Tamil. It is also called as Hanuman mantras in Tamil or Anjaneyar slokas in Tamil or Dushta shakti neenga manthiram in Tamil or Hanuman manthirangal in Tamil.