உங்களின் வருமானம் பெருக, வீண் செலவுகள் குறைய இம்மந்திரம் துதியுங்கள்

இக்காலத்தில் அனைவர்க்கும் பணம் அதிகம் தேவைப்படுகிறது அப்பணத்தை சம்பாதிக்க ஒரு மந்திரம் இதோ.

vinayagar

பணமில்லாதவன் பிணம் என்று சிலர் கூறுவார்கள். இக்காலத்தில் பணம் இல்லாமல் எவரும் எந்த ஒரு காரியத்தையும் செய்ய இயலாத ஒரு நிலைதான் இருக்கிறது. அப்படிப்பட்ட பணம் சம்பாதிப்பதற்கு ஒருவருக்கு செல்வ மகளான லட்சுமியின் கடாட்சமும், எதையும் எதிர்த்து சாதனை புரியு செய்யும் விநாயகப் பெருமானின் அருளும் வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தவாறு இருப்பவர் தான் ஸ்ரீலட்சுமி கணபதி. அந்த கணபதியின் மந்திரத்தை உச்சரிப்பதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

laksh vina

ஸ்ரீலட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம்கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா

லட்சுமி தேவியின் அனுகிரகம் நிறைந்த விநாயகப் பெருமானின் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு விநாயகரையும், லட்சுமி தேவியை மனதில் நினைத்தவாறே 108 முறை ஜெபிக்க வேண்டும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் விநாயகர் மற்றும் லட்சுமி படத்திற்கு தீபமேற்றி,இந்த மந்திரத்தை 108 முறை முதல் 1008 முறை வரை ஒரு ஜெபிப்பதால் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வருமானம் பெருகும். வீண் செலவுகள் ஏற்படாது. செல்வ சேமிப்பு உயரும். நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும்.

நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட்டு அக்காரியத்தை தொடங்குவதே மரபாகும். அந்த விநாயகனை வழிபட்டால் எல்லா நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம். அதிலும் செல்வ மகளான லட்சுமி தேவியின் தாத்பரியம் நிறைந்த ஸ்ரீலட்சுமி கணபதிகுரிய இம்மந்திரத்தை தினமும் திட சித்தத்தோடு துதிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஏழ்மை நிலை மாற மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sri lakshmi ganapathi mantram in Tamil. It is also called as Selvam peruga manthiram in Tamil or Ganapathi manthirangal in Tamil or Vinayagar manthirangal in Tamil or Vinayagar thuthi in Tamil or

.