இலங்கை ஸ்பெஷல் ‘அரைத்து விட்ட சாம்பார்’ இப்படி செய்து பாருங்கள்! உங்கள் வீடு மட்டுமல்ல தெருவே மணக்கும்.

araithu-vitta-sambar
- Advertisement -

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாக சாம்பார் வைப்பார்கள். நெல்லை சாம்பார், மதுரை சாம்பார், சென்னை சாம்பார் என்று ஒவ்வொரு ஊரில் வாழும் மக்களும் வித்தியாசமான முறையில் சாம்பார் வைப்பது வழக்கம். அவ்வகையில் இலங்கையில் இது போன்ற அரைத்து விட்ட சாம்பார் வகை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சாம்பார் நீங்கள் வைத்தால் தெருமுனை வரை உங்கள் கைமணம் கமகமக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இலங்கை அரைத்து விட்ட சாம்பார் சுலபமாக எப்படி வீட்டில் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sambar

இலங்கை சாம்பார் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு பட்டியலில் ஒன்றாக இருக்கும். மிக வித்தியாசமான முறையில் நாம் இதுவரை செய்து பார்த்திராத சாம்பார் வகையாக இந்த சாம்பார் நிச்சயம் இருக்கப் போகிறது. அதென்ன அரைத்து விட்ட சாம்பார் என்ற கேள்வி நம்முள் எழும்!! இதில் பருப்பு வகையுடன் ஒரு சில உணவு பொருட்களை சேர்த்து வறுத்து அரைத்து தான் சாம்பார் வைக்கின்றனர் என்பது தனி சிறப்பு.

- Advertisement -

இதற்கு தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய், வாழைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, சவ்சவ், நூல்கோல் கலவை – 150 கிராம், புளி – பெரிய நெல்லிக்காய் அளவிற்கு, பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவிற்கு.

sambar1

வறுத்து அரைக்க தேவையானவை:
துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தனியா – ஒரு டீஸ்பூன், மிளகு, ஜீரகம், சோம்பு, மஞ்சள் தூள் – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – இரண்டு டீஸ்பூன்.

- Advertisement -

இவை எல்லாவற்றையும் சிறிது எண்ணெய் கடாயில் ஊற்றி லேசாக வறுத்து எடுக்கவும். அதன் பின் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

podi

தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3, பூண்டு – 3 பல், கறிவேப்பிலை சிறிதளவு.

- Advertisement -

செய்முறை விளக்கம்:
முதலில் எடுத்து வைத்த காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும். காய்கறிகள் அனைத்தும் பாதியளவு வெந்ததும் வறுத்து அரைத்த கலவையை ஊற்றி, அதன் பின் புளிக்கரைசலை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

puli-karaisal

இப்போது கடாயில் எண்ணெய் அல்லது நெய் தேவையான அளவிற்கு ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்க்க வேண்டும். கடுகு, வெந்தயம் தாளித்து பின் கில்லி வைத்த காய்ந்த மிளகாய், நசுக்கிய பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை தாளித்தம் செய்து சாம்பாருடன் சேர்க்க வேண்டும்.

sambar2

அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுலபமா கமகமன்னு வீடே மணக்கும் வித்தியாசமான சுவையுடன் கூடிய புது வகை சாம்பாரை நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
இட்லி தட்டில், துணி போட்டு இட்லி ஊற்றும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? அந்த இட்லி துணியில், இட்லி ஒட்டாமல் இருக்க என்ன செய்வது?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -