விருப்பங்கள் நிறைவேற ஸ்ரீ ராகவேந்திர மந்திரம்

Ragavendra-1

நாம் பெருபாலான நேரங்களில் வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் தோன்றும் போது மட்டுமே திருவடி ஆன இறைவனின் அருளை வேண்டுகிறோம். அவ்வாறு இறைவனை வேண்டியும் சிலருக்கு அவர்களின் பிரச்சனைகள் தீருவதில்லை. உலகில் இறைவனின் பிரதிநிதியாக தோன்றியவர்கள் தான் மகான்களும், ஞானிகளும். இவர்களை நாம் எல்லோரும் தூய்மையான இதயத்துடன் சரணடையும் போது நமக்கு எல்லா வகையிலும் உதவுகின்றனர். அப்படி வாழ்ந்த ஒரு மகான் “ஸ்ரீ ராகவேந்திரர்” அவரை வழிபடும் மந்திரம் இது.

Ragavendra

ஸ்ரீ ராகவேந்திரர் மந்திரம்

ஓம் வெங்கட நாதாய வித்மஹே
ஸச் சித்தானந்தாய தீமஹி
தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

ஸ்ரீ ராகவேந்திரருக்குரிய இந்த மந்திரத்தை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு பூஜையறையில் ராகவேந்திரர் ஸ்வாமியின் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, தூபங்கள் கொளுத்தி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை 48 நாட்கள் தொடர்ந்து செய்து வர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.

Ragavendra

ஆன்மீக பூமியான தமிழ் நாட்டில் 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர் தான் ஸ்ரீ ராகவேந்திரர். இவர் இப்பிறவியில் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் வழிபாட்டை மக்கள் அனைவரிடமும் பரப்பும் புண்ணிய பணியை மேற்கொண்டார். மகானாகிய ஸ்ரீ ராகவேந்திரர் தன்னை சோதிக்க நினைத்தவர்களுக்கு அவர்களின் அகங்காரத்தை அடக்கி ஞானத்தை அருளினார். தன்னை உள்ளன்போடு வணங்கியவர்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தினார். அப்படிப்பட்ட மகானுக்குரிய இம்மந்திரத்தை உண்மையான பக்தியுடன் உரு ஜெபித்து அவரை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
பல நன்மைகளை தரும் சிவ மந்திரம்

English Overview:
Here we have Sri Raghavendra mantra in Tamil or Raghavendra Swamy mantra in Tamil. This mantra needs to be chanted especially during Thursday.