பல நன்மைகளை தரும் சிவ மந்திரம்

Sivan

இந்த உலகில் பிரச்சனைகளோ அல்லது குறைகள் இல்லாத மனிதர்கள் என யாருமே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சனைகள் இருக்கின்றன. ஒரு சில மனிதர்கள் சிறிது கடினமாக முயற்சித்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் அப்படியான கடின முயற்சிகள் செய்தும் பலருக்கு அக்குறைபாடுகள் நீங்குவதில்லை. அப்படிப்பட்ட விடயங்களால் அவதிப்படுபவர்கள், “சிவ பெருமானுக்குரிய” இம்மந்திரத்தை கூறி வழிபட்டு நன்மைகள் பல பெறலாம்.

Sivan

நம சிவாய மந்திரம்

ஓம் நம சிவாய ஜெய ஜெய
ஓம் ஸ்ரீ நம சிவாய

சிவ பெருமானை போற்றும் இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விட்டு உங்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறை அல்லது வேறு ஏதாவது அறையில் தரையில் ஒரு விரிப்பை போட்டு அதில் வடக்கு முகமாக பார்த்தவாறு சம்மணமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், மேலே உள்ள மந்திரம் அதை 108 முறை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். தீய எண்ணங்கள் நீங்கும். நீங்கள் செய்கிற காரியங்களில் வெற்றி கிட்டும். நல்ல செல்வ சேமிப்பு உண்டாகும். பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவனுக்குரிய தினங்களில் இந்த மந்திரத்தை ஜபித்தால் அதிக நன்மைகளை பெறலாம்.

“பிறப்பு, வாழ்க்கை, இறப்பு” என்கிற விதி இங்கு வாழும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானது. சில ஆன்மீக பெரியோர்கள் கருத்து படி இம்மூன்றும் ஒரு மாயை அதே நேரத்தில் இம்மூன்றையும் ஒரு ஆன்மாவிற்கு அளிப்பவர் இறைவனாகிறார். மேலும் ஒவ்வொரு உயிர்களும் அதனின் உண்மை வடிவமான “ஆன்மா” செய்த நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அந்த ஜீவனுக்கு பிறப்பு வாழ்க்கை இறப்பு என்கிற மூன்றையும் தீர்மானிப்பவராக இருக்கிறார் பரமேஸ்வரனாகிய சிவ பெருமான்.

sivan

சித்தர்கள் மற்றும் முனிவர்கள் தவமியற்றி காண விரும்பும் இறைவனாக சிவ பெருமானே விளங்குகிறார். உலகில் வாழும் உயிர்கள் அனைத்தும் மிகவும் பயப்படக்கூடிய ஒரு விடயம் மரணமாகும். “பிரம்மா, விஷ்ணு, சிவன்” என்ற “மும்மூர்த்திகளில்” எல்லாவற்றிற்கும் முடிவாக இருக்கக்கூடிய சிவ பெருமானை வணங்குவதால், எப்படிப்பட்ட பயங்களும் நீங்கி நமது வாழ்வில் பல நன்மைகள் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் இறைவனுக்கு உணவை படைக்கும்போது கூறவேண்டிய மந்திரம்

English Overview:
Here we described the benefits of Om namah Shivaya mantra in Tamil. This is the very powerful Shivan mantra in Tamil and this needs to be chant daily.